அனுபவ மலரின் அற்புதத் தேன் துளிகள்

அனுபவ மலரின் அற்புதத் தேன் துளிகள், ஜோதிட சக்கரவர்த்தி ஏ.எம். ராஜகோபாலன், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 224, விலை 150ரூ.

இந்தியா என்பது மாபெரும் புண்ணியபூமி. அதன் புதல்வர்களாகிய நாம், பக்தி, தியாகம், தர்மம், நேர்மை, அன்பு, ஒழுக்கம், வீரம் இவையெல்லாம் ஒருங்கே பெற்றவர்களாக இருக்கிறோம். ஆனால் நம்மிடம் ஒற்றுமை இல்லை. இந்து நெறிமுறையைப் பாதுகாக்க வீரமும் ஒற்றுமையும் அவசியம் என்பதை உணர்த்த தம் பகுத்த அனுபவப் பின்னணி கொண்டு குமுதம் ஜோதிடம் வார இதழில் வாராவாரம் தலையங்கம் தீட்டி எழுச்சி கொள்ளச்செய்தவல் ஜோதிட சக்கரவர்த்தி ஏ.எம்.ஆர். அவர்கள். அத்தலையங்கங்களின் தொகுப்பே இந்நூல். இந்த புண்ணிய தேசத்தின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் அதேவேளை, இந்திய மண்ணிற்கு எதிராக யாராவது கருத்துத் தெரிவித்தால் நாட்டுப்பற்றுடன் தக்க ஆதாரங்களைக்காட்டி அதனை எதிர்த்து வாதாடி தர்மத்தை நிலைநாட்டும் துணிவே நூல் முழுவதும் நிறைந்து கிடைக்கிறது. இந்தியப் பெண்களின் மகத்துவத்தை எடுத்துச்சொல்லி, நாகரிக மோகத்தை தூக்கி எறிந்துவிட்டு குடும்பத்தை ஒரு கோயிலாக உருவாக்கும் தகுதியும் சக்தியும் பெண்களுக்கு மட்டுமே உண்டு என்பதை நிறுவுகிறார். மதுவால் நம் மக்கள் படும் துயரங்கள், அந்நியர்களால் நம் தேசம் படும் பாடு, மதமாற்றத்தைத் தூண்டிவிட்டு நம் இந்துக்களைப் பிரித்துப்பார்க்கும் மற்ற மதத்தினரின் தகாத செயல்கள், மதச்சார்பின்னை என்கிற பெயரில் இந்துக் கோயில்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் கூட்டம், இந்துக்கள் மீது நடத்தப்படும் அரசியல் துஷ்பிரயோகம் என்று எதையும் விடாமல் எடுத்துக்காட்டி இந்து தர்மத்தை நிலைநாட்டும் நேர்மையே நூலின் பலம். இந்த பாரதத்தைக் கட்டிக்காத்த ஆன்மிக மகான்கள், தேசத்தலைவர்கள், நேர்மையான அரசியல் தலைவர்கள் ஆகியோரின் உழைப்பை எடுத்துக்காட்டி, இளைஞர்களை நல்வழிப்படுத்தும் அரிய செயலை தம் எழுத்தின் மூலம் தந்துள்ளார் ஏ.எம்.ஆர். நன்றி: குமுதம், 3/8/2015.

Leave a Reply

Your email address will not be published.