உணர்ச்சிகளின் ஊர்வலம்

உணர்ச்சிகளின் ஊர்வலம், நா. பார்த்தசாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, விலை 65ரூ.

வித்தியாசமான தலைப்பில் உணர்ச்சி பூர்வமாக எழுதப்பட்ட வரிகள் கொண்ட நாவல். பெண்ணின் மனநிலையை அற்புதமாக நூலாசிரியர் படம் பிடித்து காட்டியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.  

—-

 

நலமா? நலமே!, பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், சென்னை, விலை 100ரூ.

நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, முத்திரை பயிற்சி, ஆசனங்கள், தியானம் போன்றவற்றில் ஈடுபட்டால் ஒரு மனிதன் நலமுடன் வாழ முடியும் என்பதை மருத்துவர் வே. வீரபாண்டியன் இந்த நூலில் சொல்லித் தருகிறார். இந்த பயிற்சிகளை எடுத்துக் கொள்ளும் முறைகள், எடுத்துக்காட்டுகளுடன் எளிமையாகத் தரப்பட்டுள்ளன. மேலும் இயற்கை உணவு பற்றியும், மருந்தில்லா மருத்துவமான அக்கு பிரசர், அக்கு பஞ்சர் போன்றவை குறித்தும் குறிப்பிடுகிறார். உடல் நலத்தில் அக்கறை கொண்டோருக்கு இந்த நூல் ஒரு கருத்துப் பெட்டகம். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.  

—-

விழி மூடிய நினைவுகள், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, விலை 105ரூ.

ஆயிரமாயிரம் சீரியல்கள், இணையதளங்கள் இவற்றால் இளைய தலைமுறையினர் மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள். அவர்கள் கவலைகளை மறந்து, மனம் அமைதியாகி, மற்றவர்களை நேசிக்க வைக்கும் வகையில் இளைய தலைமுறையினர்களை ஒரு நாவலாக படைத்திருக்கிறார் நூலாசிரியர் பொற்கொடி. நன்றி: தினத்தந்தி, 6/5/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *