உணவு யுத்தம்

உணவு யுத்தம், எஸ். ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 240ரூ.

நமது உடல் நலக் குறைபாட்டுக்கு, மாறிப்போன முறையற்ற உணவு முறையே காரணம். உணவின் பெயரால் நாம் நாள்தோறும் ஏமாற்றப்படுகிறோம் என்பதை எடுத்துக்கூறும் வகையில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதி 40 கட்டுரைகளின் தொகுப்பு. பிரபலமாகி வரும் துரித உணவகங்கள் உடல நலத்திற்கு பிராதன கேடு விளைவிக்கும். எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம். மரண விலாஸ்களாக மாறிவிட்ட சாலையோர மோட்டல்கள், ஆயுளைக் குறைக்கும் ஆயில் (எண்ணெய்) உணவுகள், வயிற்றைப் புரட்டிப் போடும் புரோட்டாக்கள், நகரம் கிராமம் என்ற பேதமில்மல் ஆக்கிரமித்துவிட்ட ஜங்க்புட் எனப்படும் சக்கை உணவுகள் என்று நோய்களை உண்டாக்கும் உணவுகளுக்கு எதிராக எழுத்துச் சாட்டையால் யுத்தம் புரிகிறார் ஆசிரியர். உணவை நஞ்சாக்கும் வணிக முயற்சிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று சாடுகிறார். பாரம்பரியமாக நாம் உண்டு வந்த சிறுதானியங்கள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நமது சந்ததிகளின் சிந்தனைக்கு சரியான விழிப்புணர்வை ஊட்டுகிறார். நன்றி: தினத்தந்தி, 17/12/2014.    

—-

கிருஷ்ண காவியம், எத்திராஜன் ராதாகிருஷ்ணன், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 200ரூ.

திருமாலின் பத்து அவதாரங்களில் முக்கியமானது கிருஷ்ணாவதாரம். நவரசங்களும் கொண்ட ஏராளமான கதைகள் அடங்கியது கிருஷ்ண புராணம். கிருஷ்ணன் வாழ்க்கையை 1602 கவிதைகளில் காவியமாகப் படைத்திருக்கிறார் எத்திராஜன் ராதாகிருஷ்ணன். கவிதைகள் புரிந்து கொள்வதற்கு எளிமையாகவும், அதே சமயம் படிப்பதற்கு இனிமையாகவும் அமைந்துள்ளன. மகாபாரதத்தில் மையமாக உள்ளவர் கிருஷ்ணர். எனவே, இப்புத்தகத்தில் மகாபாரதமும் இடம் பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி, 17/12/2014.

Leave a Reply

Your email address will not be published.