கரமசோவ் சகோதரர்கள்

கரமசோவ் சகோதரர்கள் (2 தொகுதிகள்), கவிஞர் பெருமான் புவியரசு (டாஸ் டாவ்ஸ்கி), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 1490, விலை 1300ரூ.

உலக இலக்கியத்தில் மிகச்சிறந்த நாவலாசிரியர் என்ற புகழுக்கு உரியவர், ரஷ்ய இலக்கிய மேதை டாஸ் டாவ்ஸ்கி. ஏழை மக்கள், மரணம் அடைந்தவர்களின் வீடு, முட்டாள், குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் என்ற ஐந்துபடைப்புகள் மிகச் சிறந்தவை. இவற்றில் குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் ஆகிய இரண்டு நாவல்களும் கலையின் சிகரங்கள். அவருடைய நாவல்களை, அவ்வளவு சுலபமாக படித்துவிட முடியாது. மிகவும் கவனமாக, நிறுத்தி, நிதானத்துடன் தான் படிக்க முடியும். அழுத்தமும், கனமும் கூடிய அற்புதப் படைப்புகள் அவை என்பார் புலவர் கோ. தேவராசன். 1880ம் ஆண்டு வெளிவந்த நாவல் இது. கடவுள் இரும்பு என்னும் தத்துவத்தை வலியுறுத்தும் நாவல். கரமசோவ் சகோதரர்கள், கதை அம்சம் என்று பார்த்தால் சாதாரண துப்பறியும் நாவல் போன்றதுதான். ஆனால், அற்புதமான குணச் சித்திரப் படைப்புகள் இதில் வரும் கேரக்டர்கள். மூன்று புதல்வர்களின் தந்தையான கரமசோவ் பணத்திற்காக எத்தகைய இழிந்த செயலையும் செய்யத் துணிபவன், மோசடிகளைத் துணிந்து செய்யக் கூடியவன், மண்டைக் குப்பம் உள்ளவன், கேடு கெட்டவன் என்று அறிமுகப்படுத்துவார். இந்த பாவலோவிச் கரமசோவ்தான் கொல்லப்படுகிறான். நீரோட்டம் போன்ற தெளிவான நடையில் மொழி பெயர்ந்திருக்கும். புவியரசன் போற்றப்பட வேண்டியவர். -எஸ். குரு. நன்றி: தினமலர், 29/12/2012.  

—-

 

நிமிடத்தில் திருமணப் பொருந்தங்கள், ஜோதிட ரத்னா ஜி. ரவீந்திரநாத், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை 17, விலை 60ரூ.

தலைப்பிற்கு ஏற்றபடி நிமிடத்தில் திருமணப் பொருத்தம் பார்க்க உதவும் நூல்.  

—-

 

தொப்பை, உடல் எடை குறைய எளிய மருத்துவம், மீ. பழனியப்பன், குறிஞ்சி, 21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 30ரூ.

தொப்பை, உடல் எடை குறைய ஏராளமான மருத்துவ அறிவுரைகள், சுலபமாக நாமே தயாரிக்கக்கூடிய நாட்டு மருந்துகள் பற்றிய விவரங்கள் அடங்கிய நூல், தொப்பை, உடல் எடை உள்ளவர்கள் மட்டுமல்லாது. அனைவரும் கையாளக்கூடிய வழிமுறைகள் அநேகம் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/1/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *