கல்வி நெறிக் காவலர் நெ.து. சுந்தரவடிவேலு

கல்வி நெறிக் காவலர் நெ.து. சுந்தரவடிவேலு, டாக்டர் பி. இரத்தினசபாபதி, டாக்டர் ஆர். இராஜமோகன், சாந்தா பப்ளிணர்ஸ், பக்கங்கள் 312, விலை 150ரூ.

எல்லோரும் கற்போம், ஒன்றாகக் கற்போம் நன்றாகக் கற்போம், என்ற கல்வி முழக்கத்தால் தமிழகத்தில் கல்வி வளர காரணமாய் இருந்தவர் கல்விக் காவலர் நெ.து.சுந்தரவடிவேலு. பகுத்தறிவுக் கொள்கையை பெரியாரிடம் கற்றார். பலருக்கும் கல்விக் தொண்டு செய்வதில் காமராஜருக்குத் துணை நின்றார். இவர் ஊருக்கு உபதேசம் செய்யாமல் தானே உதாரணமாக வாழ்ந்தவர். கலப்புத் திருமணம் செய்தவர். சாதி மறுப்புக் கொள்கை கொண்டவர். தன் ஒரே மகன் திருவள்ளுவனை, இளமையிலேயே இழந்து தவித்தாலும், அதனால் தன் கல்விப் பணியை இழக்காமல் தொடர்ந்து கல்விப் புரட்சி செய்ததை கட்டுரையாளர் கண்ணீர் மல்க எழுதியுள்ளார். உலகத் தமிழ் என்னும் தலைப்பில் இவரது 18 கட்டுரைகள் உலகளாவிய கல்வியை உணர்த்துகின்றன. முனைவர் மா.கி. ரமணன்.

—–

வேதமும் பண்பாடும், சர்மா சாஸ்திரிகள், விலை 200ரூ.

வேத நெறி வாழ்க்கை, ஆசார அனுஷ்டானங்கள் பற்றி, பலருக்கும் தெரிய வேண்டும் என்ற கருத்தில் இந்த நூடில ஆசிரியர் படைத்திருக்கிறார். அதற்காக கேள்வி – பதில் வடிவத்தில் சந்தேகங்களை விளக்கியிருக்கிறார். நம்மை விடப் பெரியவர்கள், படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று நினைக்க ஆரம்பித்தால், அகங்காரம் குறையும். நாய்களை வீட்டில் வைத்து கொஞ்சி மகிழ்வது சரியல்ல என்பது போன்ற பல தகவல்கள், இக்கேள்வி பதிலில் அடக்கம் அடிப்படை சாஸ்திர விஷயங்களை அறிந்து கொள்ள ஈடுபாடு கொண்டோர் இந்த நூடில விரும்பி வாசிக்கலாம்.

—–

இதழியல் வரலாற்றில் சமரசம், முனைவர் மு.கி. அகமது மரைக்காயர், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், 138 பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை 600012, பக்கங்கள் 344, விலை 150ரூ.

தமிழ் இதழியலின் தோற்றம், 1831ல் நிகழ்ந்தது. அதிலிருந்து 40 ஆண்டுகள் கழித்து, முஸ்லிம்கள் இதழியல் துறையில் கால்பதித்தனர். 1980ல் துவங்கப் பெற்ற சமரசம் முஸ்லிம் இதழியல் வரலாற்றில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். சமரசம் இதழின், கருத்தியல் நிறுவல் உத்திகள் என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்டத்திற்காக இந்நூலாசிரியர் மேற்கொண்டே ஆய்வே நூலுருப் பெற்று வெளியாகியிருக்கிறது. இந்த ஆய்வு பாராட்டுதலுக்கு உரியது. – சிவா நன்றி: தினமலர், 03 பிப்ரவரி 2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *