குட்டி இளவரசன்

குட்டி இளவரசன், அந்த்வான் து செந்த் எக்சுபெரி, தமிழில் வெ. ஸ்ரீராம், ச. மதனகல்யாணி, க்ரியா வெளியீடு, விலை 100ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-207-9.html குழந்தைகளே உங்கள் எல்லோருக்கும் தனித்தனிக் கோள்கள் இருந்தால் எப்படி இருக்கும்? உங்கள் வீடு அளவுக்கே இருக்கும் கோள் ஒன்றிலிருந்து, தனது காதலி ரோஜாவுடன் சண்டையிட்டுப் புறப்படுகிறான் குட்டி இளவரசன். ஒவ்வொரு கோளாக ஆறு கோள்களில் ஆறு விதமான மனிதர்களைச் சந்தித்துவிட்டு ஏழாவதாகப் பூமிக்கு வருகிறான். விமானி ஒருவரைச் சந்திக்கிறான். பெரியவர்கள் எதையுமே புரிந்துகொள்வதில்லை என்பதை அந்த விமானிக்கு குட்டி இளவரசன் உணர்த்துகிறான். குட்டி இளவரசன் ஒரு நரியையும் சந்திக்கிறான். இதயத்துக்குத்தான் பார்வை உண்டு. முக்கியமானது கண்களுக்குத் தென்படாது என்ற ரகசியத்தைக் குட்டி இளவரசனுக்கு நரி சொல்கிறது. மீண்டும் தன் கோளுக்குச் செல்ல விரும்புகிறான் குட்டி இளவரசன். ஒரு அரசனின் விரலைவிட அதிக சக்தியைக் கொண்ட பாம்பு குட்டி, இளவரசனுக்கு உதவி செய்கிறது. குட்டி இளவரசனை இழந்த விமானியோ துயரத்தில் ஆழ்கிறார். குழந்தைகளே உங்களுக்கும் குட்டி இளவரசனோடு பேச வேண்டுமா? இரவில் வானத்தில் தெரியும் எண்ணற்ற விண்மீன்களுக்கிடையே ஒரு கோளில் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் குட்டி இளவரசனை நோக்கிக் கையசையுங்கள், அவன் உங்கள் அன்பை ஏற்றுக்கொள்வான். நன்றி: தி இந்து, 23/4/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *