கோரா

கோரா, தாகூர், சாகித்திய அகாதெமி, சென்னை, விலை 350ரூ.

தாகூர் எழுதிய நாவல் கோரா கோரா என்னும் இந்நாவல் இரவீந்திரநாத் தாகூரின் உலகப் பிரசித்தி பெற்ற படைப்புகளில் ஒன்றாகும். நாடு, சாதி, மதம், ஆண் பெண் உறவுகள் மற்றும் முற்போக்கு, பிற்போக்குச் சிந்தனைகள் என வாழ்க்கையின் அடிப்படை அடையாளச் சின்னங்களை அலசி, ஆராய்ந்து, வெளிச்சம் போட்டுக்காட்டி நம்மைச் சிந்திக்க வைக்கும் ஒரு மகத்தான நாவல் இது. வங்க மொழியில் தாகூர் எழுதிய நாவல் மகர்ஜியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, அந்த மொழிபெயர்ப்பிலிருந்த தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார் கா. செல்லப்பன். மொழிபெயர்ப்பு சிறப்பாக அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 3/6/2015.  

—-

பள்ளு இலக்கியமும் சமுதாயப் பார்வையும், தாரிணி பதிப்பகம், சென்னை, விலை 250ரூ.

குறிவஞ்சி, தூது, ஆற்றுப்படை, அம்மானை, உலா, கலம்பகம், பரணி, அந்தாதி, பள்ளு போன்றவை சிற்றிலக்கிய வகைகளாகும். இந்த நூலில் பள்ளு இலக்கியம் தோன்றிய காலமான 16, 17, 18ம் நூற்றாண்டுகளில் இருந்த அவர்களின் சமூக வாழ்க்கை, பழக்க வழக்கங்கள் மற்றும் அரசியல் சூழ்நிலைகளை முனைவர் அகிலா சிவசங்கர் அழகிய முறையில் ஆராய்ந்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 3/6/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *