சாதனையாளர்களுடன் ஒரு சந்திப்பு

சாதனையாளர்களுடன் ஒரு சந்திப்பு, எம்.எஸ். கோவிந்தராஜன், தென்றல் நிலையம், 12பி, மேலசன்னதி, சிதம்பரம் 608001, விலை 75ரூ.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 38 சாதனையாளர்களின் நேர்காணல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, எழுத்தாளர் வல்லிக்கண்ணன், கவிஞர் மு.மேத்தா, என்.சி. மோகன்தாஸ், மெர்வின் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். புதுக்கோட்டையில் இருந்து குழந்தைப் பத்திரிகைகள் ஏராளமாக வெளிவந்த காலக்கட்டம் பற்றி பலர் விவரித்துள்ளனர். மாணவராக இருந்தபோதே பி. வெங்கட்ராமன் (வடமலை அழகன்) டிங்டாங் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக பணியாற்றியது சுவையான தகவல். சாதனையாளர்களின் அனுபவங்களை அறிவது, சாதனைகள் படைக்க உதவும்.  

—-

 

காலத்தின் குரல், புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 32, விலை 210ரூ.

மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மாலன் புதிய தலைமுறை இதழில் எழுதிய தலையங்கங்களின் தொகுப்பு நூல். அநீதிகளைக் கண்டு சீற்றம், நல்லவர்களின் செயலுக்குப் பாராட்டு, முக்கிய பிரச்னைகளை நடுநிலையுடன் ஆராய்தல். இப்படி மாலனின் எழுத்துக்கள் நீதியை நிலைநாட்டுவதாக அநீதிக்கு எதிராக போர்க்குரல் எழுப்புவதாக அமைந்துள்ளன. அவர் எழுத்துக்களில் புயலும் உண்டு. தென்றலும் உண்டு. இரண்டுமே ரசிக்கத்தக்கவை. நன்றி: தினத்தந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *