சூரிய உதடுகள்

சூரிய உதடுகள், சுசி. நடராஜன், சாரதி பதிப்பகம், 107/6, ரிச்சித் தெரு, சித்தாதிரிப் பேட்டை, சென்னை2, பக். 96, விலை 45ரூ.

கவிதையின் ஆழம் கவிஞன் எடுத்தாளும் வார்த்தைகளில்தான் உள்ளது. மனிதம், இயற்கை, சமூகம், காதல், போட்டி, பொறாமை, சுதந்திரம் எதுவாக இருந்தாலும் சுசி. நடராஜனின் வார்த்தைகளில் ஓர் உயிர்ப்பு பெற்றுவிடுகிறது. இரட்டை மாடு வாழ்க்கை வண்டி பூட்டிய பிறகு பாரம் சுமக்க பயப்படும் மிரட்சி வாழ்க்கைப் பயணத்தில் எழும் மிரட்சியை ஆசிரியர் தொட்டுச் செல்லும் பாங்கில் ஒரு பெருமூச்சு எழுகிறது. வாழ்க்கையின் எச்சரிக்கை தெரிகிறது. கவிதைப் பிரியர்களுக்கு பிடித்தமான கவிதைத் தொகுப்பு.  

—-

 

கடந்தை கூடும் கேயாஸ் தியரியும், சிவசங்கர் எஸ்.ஜே., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை 98, பக். 70, விலை 50ரூ.

நம்பிக்கையும் விஞ்ஞானத்தையும் வாழ்வியலோடு கலந்து தரும் உத்தி ஒவ்வொரு பாத்திரப் படைப்பிலும் உலாவருகிறது. மனிதநேயம்தான் எந்த இதயத்தையும் எளிதில் வசப்படுத்தும் என்பது இக்கதைகளில் வரும் ஒவ்வொரு மாந்தரின் படைப்பிலும் மிளிர்கிறது. எனக்கென ஒரு நிழல் வேண்டும் எனச் சிறுகதைகளில் வாழ்வியலுக்கான ஒரு தேடலை ஆசிரியர் மேற்கொண்டிருப்பது வாசகர்களையும் தேட வைக்கிறது. நடையும் கதைகளின் அமைப்பும் நூலாசிரியரைப் பேச வைக்கும். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 24/10/2012

Leave a Reply

Your email address will not be published.