தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்(தொகுப்பு 1)
தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்(தொகுப்பு 1), தொகுப்பாசிரியர் அ. சிதம்பரநாத செட்டியார், விகடன் பிரசுரம், பக். 304, விலை 120ரூ.
To buy this Tamil book online : http://www.nhm.in/shop/1000000021817.html தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. கல்கி, புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், அகிலன் உள்ளிட்ட 20 எழுத்தாளர்களின் படைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. ஏற்கெனவே படித்திருக்கக்கூடிய கதைகள்தாம் என்றாலும், அத்தனை சிறுகதைகளையும் ஒரே புத்தகமாகப் படிக்கின்ற வாய்ப்பு பரவசத்தைத் தருவதாக உள்ளது. எல்லாச் சிறுகதைகளிலும் கதை இருக்கும். ஆனால் எல்லாக் கதைகளும் சிறுகதைகள் அல்ல என்பது உட்பட சிறுகதை இலக்கியத்துக்கான பொதுவான வரையறைகளுக்கு உட்பட்டு இதிலுள்ள அத்தனை கதைகளும் அமைந்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால் ராஜாஜியின் ‘அன்னையும் பிதாவும்’ கதை நாயகனின் போலி கௌரவம், கல்கியின் ‘கேதாரியின் தாயார்’ கதையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சமூகக் கொடுமை ஆகியவை காலத்துக்கும் மாறாமல் தொடர்வதுதான் வியப்பு. இப்போதைய நவீனக் கதைகளின் முன்னோடியான புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’, வறுமையின் கொடுமையால் தடம்மாறும் குடும்பத்தின் கதையான ‘கோபுர விளக்கு’ என அத்தனை சிறுகதைகளும் சுகமான வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன. சிறுகதைகளின் வடிவமே மாறிப்போன இக்காலத்தில் உண்மையான சிறுகதைகளை அடையாளம் காட்டும் நல்ல தொகுப்பு இந்நூல். நன்றி: தினமணி, 7/9/2015.