தாயும் ஆனவன்

தாயும் ஆனவன், சுசீலா, ஜீஜீ எண்டர்பிரைசஸ், விலை 120ரூ.

சிவாஜிகணேசனும், எம்.ஆர்.ராதாவும் இணைந்து நடித்த “பாகப்பிரிவினை” , “பாவமன்னிப்பு” ஆகிய திரைப்படங்களை யாரும் மறந்திருக்க முடியாது. அதில் வரும் வசனங்கள், ரசிகர்களின் செவிகளில் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்தப் படங்களுக்கு வசனம் எழுதியவர் சோலைமலை. அவருடைய மகள் சுசீலா சோலைமலைதான் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். இப்புத்கத்தில் தாயும் ஆனவன், பந்தயம், காரடையான் நோன்பு, ஏய் என்ற நான்கு குறு நாவல்கள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் உரையாடல்கள் மூலமே கதையை நகர்த்திச் செல்கிறார் சுசீலா. படிக்கும்போது, அவருடைய தந்தையிடம் இருந்த வசனம் எழுதும் ஆற்றல், இவருக்கும் கைவரப் பெற்றிருப்பதை உணர முடிகிறது. சிறந்த நாவல்களைப் படைத்துள்ள சுசீலா பாராட்டுக்கு உரியவர். நன்றி: தினத்தந்தி, 16/3/2016.  

—-

மனித நேயத்தை நோக்கி, தேவிசந்திரா, மணிமேகலை பிரசுரம், விலை 90ரூ.

பள்ளிக்கூட சம்பவங்களை மையக்கருவாக வைத்து எழுதப்பட்ட சமூக நாவல். மாணவர்களிடம் ஏற்படும் மோதல்போக்கு, அவர்களுக்கு உருவாக்கப்படும் இன்னல்கள், அவற்றை எவ்வாறு மனித நேய நோக்கோடு அணுக வேண்டும் என்பதை துடிப்பான பாத்திரங்கள் வாயிலாக நூலாசிரியர் தேவி சந்திரா நன்கு விவரித்து இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 16/3/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *