திருக்கோயில் தரிசனம்

திருக்கோயில் தரிசனம், மகேந்திரவாடி உமா சங்கரன், வானதி பதிப்பகம், விலை 140ரூ.

குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர்கோவில், நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர்கோவில், அனுமந்தபுரம் அகோர வீரபத்பத்திரர்கோவில், கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர்கோவில், நேமம் ஆவுண்டீஸ்வரர் கோவில் மற்றும் சென்னை புறநகரில் அமைந்துள்ள கோவில்கள் உள்பட 40 கோவில்களைப் பற்றி மகேந்திரவாடி உமா சங்கரன் எழுதிய நூல்.  இந்து மத நெறியை அறிந்து கொள்ளவும், இந்தக் கோவில்களைத் தரிசிக்கவும் இந்த நூல் பெரிதும் உதவும். நன்றி: தினத்தந்தி, 12/2/2016.  

—-

முற்லிம் பெண்களின் நேர்வழிகாட்டி, எஸ்.கே.எஸ். பப்ளிஷர்ஸ், விலை 100ரூ. இல்லறம் நல்லறமாக அமைய பெண்களின் பங்கு முக்கியமானது. அந்த வகையில் பெண்கள் எப்படி நடக்க வேண்டும் என்பதை திருக்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளின்படி இந்த நூலில் மவுலவி எஸ்.அகபர் பாதுஷா எடுத்துரைக்கிறார். ஒரு பெண் மகளாக, மருமகளாக, தாயாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை எளிய முறையில் விளக்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 12/2/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *