திருப்பதி

திருப்பதி, மஞ்சுள் பதிப்பகம், 2வது தளம், உஷா பிரீத் காம்ப்ளக்ஸ், 42, மாளவியா நகர், போபால் 462003, விலை ரூ 199.

உலகிலேயே மிக முக்கியமாகக் கருதப்படும் கோவில்களில் ஒன்றான திருப்பதி கோவிலின் தெய்வீக மற்றும் வரலாற்றுப் பின்புலத்தை விளக்கும் நூல். பூமியில் சில காலம் வாழ்வதென்று முடிவு செய்த வராகப் பெருமாள், தனது பட்சி வாகனமான கருடனை அழைத்து, சொர்க்கத்திலிருந்து தனது வசிப்பிடமான வைகுண்டத்தில் இருந்து தனக்குப் பிரியமான கிரீடாச்சல மலையை எடுத்து வந்து, தான் குறிப்பாகத் தேர்ந்தெடுத்த ஓர் இடத்தில் அதை வைக்குமாறு கட்டளையிட்டார். இந்த இடம்தான் திருப்பதி எனப்படுகிறது. திருப்பதி கோவிலில் நடத்தப்படுகின்ற பல்வேறு சடங்குகள் மற்றும் திருவிழாக்களைப் பட்டியலிடுவதோடு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு விஜயம் செய்யும் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்ற பல்வேறு வசதிகளையும் பட்டியலிடுகிறது. கோவில் வளாகம் மற்றும் அதன் பிற அம்சங்களைப் பற்றிய ஒரு சுருக்கமான விவரிப்பும் இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கதைகளோடும் உண்மையான தகவல்களோடும் எளிமையாக உள்ள இந்த புத்தகம், அறிஞர்கள், பக்தர்கள் மற்றும் சாதாரண மக்களின் மனங்களைக் கவரும் வகையில் நூலாசிரியர் கோட்டா, நீலிமை ஆங்கிலத்தில் படைத்துள்ளதை தமிழுக்கு மொழி மாற்றம் செய்திருக்கிறார் நாகலட்சுமி சண்முகம்.  

—-

 

குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை, ம.காமுத்துரை, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை2, விலை 70ரூ.

16 சிறுகதைகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி,6/11/13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *