திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம், முனைவர் ஸ்ரீ ஜெகநாத சுவாமி, ஸ்ரீ லலிதா பதிப்பகம், கோவை, பக். 194, விலை 200ரூ.

கோவிலில் வைத்து வரன் பார்ப்பது, திருமண விசேஷங்களில் மாப்பிள்ளை பெண் தேடும் யுகம் மாறி பத்திரிக்கை, இணைய தளங்கள் வாயிலாக வரன் தேடல் எளிதாகிப்போனது. வந்து குவியும் தகவல்களை வரிசைப்படுத்தி, நமது மகள் (அ) மகளுக்கு ஏற்ற வரனை முடிவு செய்வது பெற்றோர்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால். திருமண தடை, தாமதம் ஏன்? என்பதும், ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது ஏற்படும் குழப்பங்களும் குடும்பங்களை பெரிதும் பாதிக்கின்றன. இதற்குத் தீர்வாக, 10 பொருத்தங்களை நாமே எளிமையாகத் தெரிந்து கொள்ள திருமணபொருத்தம் அட்டவணை நூலை வெளியிட்டிருக்கிறார் முனைவர் ஜெகநாத சுவாமி. கோவையில் ஸ்ரீ லலிதாம்பிகா கோவில் ஏற்படுத்தி ஆன்மிகப்பணி, ஜோதிடக்கல்வியில் நீண்ட அனுபவம் பெற்றவர் இவர். இந்த நூல் வீட்டில் இருந்தால், 10 பொருத்தம் பற்றிய குழப்பம் யாருக்கும் ஏற்படாது. ஜோதிடர்களும் பயன்படுத்தும் வகையில், ஒரு உடனடி அட்டவணையாக இது பயன்படும். தினப்பொருத்தம், கணப்பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், ஸ்திரி தீர்க்கப்பொருத்தம், யேனிப் பொருத்தம், ராசி பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம், வசிய பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், வேதைப் பொருத்தம் என 10 பொருத்தங்களின் விளக்கங்கள், ஒருவருக்கு திருமணம் ஏன் தடை, தாமதமாகிறது என்பதற்கான அம்சங்களும் இந்த நூலில் அமைந்துள்ளன. உதாரணமாக, அஸ்வினி நட்சத்திர பெண்ணுக்கு அஸ்தம் நட்சத்திர ஆண் ஜாதகத்துடன் பொருத்தம் பார்த்தால் 10 பொருத்தங்களுக்கு 7 மட்டுமே பொது பொருத்தம். முக்கிய பொருத்தம் 3. அதி முக்கிய பொருத்தம் 1. திருமணம் செய்ய பொருந்தாது என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. பொருந்தும், மத்திமம், உத்தமம் போன்ற குறிப்புகளும் உண்டு. -ஜெயா. நன்றி: தினமலர், 9/4/2014.

Leave a Reply

Your email address will not be published.