பத்துப்பாட்டு பொருளடைவு

பத்துப்பாட்டு பொருளடைவு, ச.பொ.சீனிவாசன், சேகர் பதிப்பகம், விலை 350ரூ.

தமிழின் உயிர்நிலை இலக்கியங்களாக திகழ்வன சங்க இலக்கியங்கள். தமிர் மொழிக்கு செம்மொழி தகுதியையும், நிலைபேற்றையும் பெற்றுத்தந்த பெருமை, சங்க இலக்கியங்களுக்கு உண்டு. சங்க இலக்கியங்களை பொதுவான ஆய்வுக் கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்த அதிகமான நூல்கள் வெளிவந்துள்ளன. அவை போதுமானதாக இல்லை. தவிர, சொல்லடைவுகள், சொல், பொருள், வருமிடம் இலக்கணக் குறிப்பு இவற்றோடு நின்றுவிடுகின்றன. இத்தகைய தரவுகளின் தேவையை மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ள நூல்தான் “பத்துப்பாட்டு – பொருளடைவு” என்னும் ஆய்வு நூல். நன்றி: தினத்தந்தி, 30/12/2015.  

—-

நெருப்பில் வாடாத கருப்பு மலர் நெல்சன் மண்டேலா, எம்.ஏ. பழனியப்பன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 150ரூ.

To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000010718.html ஆப்பிரிக்க விடுதலைக்காக தனது இளமைக்காலம் முழுவதும் சிறையில் கழித்தவர் நெல்சன் மண்டேலா. அவர் சந்தித்த போராட்டங்கள், கொடிய இனவெறி அடக்கு முறைகள் நூலாக தொகுக்கப்பட்டு உள்ளது. நன்றி: தினத்தந்தி, 30/12/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *