பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பாயன்

பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பாயன், செ.ராசு, கொங்கு ஆய்வு மையம், விலை 120ரூ.

தமிழக சட்டசபை உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர், மாநில அமைச்சர், முதல் அமைச்சர், எம்.பி., எதிர்கட்சித்தலைவர், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர், வெளிநாட்டுத் தூதர், மாநில ஆளுநர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்தவர் டாக்டர் ப. சுப்பராயன். இவருடைய வாழ்க்கையே நிரந்தரமான பாடப்புத்தகம். அதைப்புரட்டிப் படிக்கப்படிக்க ஏராளமான புதுச்செய்திகள் எந்தக்காலத்துக்கும் பொருந்தும்படி கிடைத்துக்கொண்டேயிருக்கும் வகையில் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நூலில் பல புதிய செய்திகள், படங்கள், ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் சிறப்பைத் தருகிறது. வாழ்க்யில் முன்னேற துடிப்பவர்களுக்கு துணைநிற்கும் நூலாகும். நன்றி: தினத்தந்தி, 18/11/2015.  

—-

தமிழன் குரல், பூங்கொடி பதிப்பகம், விலை 60ரூ. தமிழர் தனி இனமா? தமிழ்நாடு தனி நாடா? தமிழகத்தில் சுதந்திரத் தமிழரசை நிறுவ முடியுமா? அப்படி நிறுவுவது அகில இந்திய ஒற்றுமைக்குப் பொருந்துமா? சுதந்திரத் தமிழரசு, சோஷலிசப் பாதையில் சென்று மக்களுக்குச் சுகவாழ்வு தருமா? என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில், சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் எழுதிய இந்நூல், நீண்ட இடைவெளிக்குப்பின் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 18/11/2015.

Leave a Reply

Your email address will not be published.