மரங்களும் திருத்தலங்களும்

மரங்களும் திருத்தலங்களும் , ஆசிரியர்: டாக்டர் ச.தமிழரசன், வெளியிட்டோர்: குறிஞ்சி பதிப்பகம், 2, சேவியர் நகர், தொல்காப்பியர் சதுக்கம் அருகில், தஞ்சாவூர் – 613 001; விலை: ரூ. 80.

புல், செடி, கொடி, மரங்கள் போன்ற 60 வகையான தாவரங்களின் இலக்கியப் பெயர்கள், அவற்றின் மருத்துவ பயன்கள், தாவரவியல் பண்புகள் பற்றியும், அவை தல விருட்சங்களாக உள்ள தேவாரப்பாடல் பெற்ற திருக்கோவிகளைப் பற்றிய விளக்கமும் இடம் பெற்றுள்ள சிறந்த நூல். பூமி வெப்பமடைதலைத் தடுக்க ஒரே வழி மரம் வளர்ப்பு மட்டுமே. அதன் அவசியத்தை ஆன்மிகக் கண்ணோட்டத்தில், அதாவது இறைவன் நேசித்த மரங்களை நாமும் நேசிக்கவேண்டும் என்ற சமுதாயக் கண்ணோட்டத்தில், 60 திருத்தலங்களும் நேரில் சென்று பார்த்து எழுதப்பட்டு இருக்கும் நூல். நன்றி:தினமலர்(13.3.2013).  

—-

 

ஆசைப்படுங்கள்! அடைவீர்கள்! (ஆசிரியர்: சி. எஸ். தேவநாதன், வெளியிட்டோர்: எஸ். எஸ். பப்ளிகேஷன், 8/2, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, முதல் தளம், தியாகராயநகர் பஸ் நிலையம் பின்புறம், சென்னை – 17, விலை: ரூ. 60)

வாழ்க்கையில் முன்னேறுவதற்கு செய்ய வேண்டிய செயல்களை விரிவாக அலசும் விதமாக தன்னம்பிக்கை பொதிந்த கருத்துக்களை மையமாக கொண்டு நூல் உருவாகி உள்ளது. விருப்பியதை அடைவதற்கு தேவையான வழிமுறைகள் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளன. சாதனை படைத்தவர்கள் சாதிக்க தூண்டுகோலாய் விளங்கிய திட்டமிடல், அணுகுமுறை, விடா முயற்சிகள் பற்றியும் பட்டியலிடப்பட்டுள்ளது. நன்றி:தினமலர்(13.3.2013).  

—–

சுய உதவிக்குழு கையேடு (ஆசிரியர்: பெ.இராஜாகோபல், வெளியிட்டோர்: தமிழிசைப் பதிப்பகம், 1/935, டி. என். எச் .பி., வெண்ணாம்பட்டி ரோடு, கலெக்ரேட் அஞ்சல், தர்மபுரி- 636 705, விலை: ரூ.100)

வறுமையில் இருந்து மீண்டு சுயமாக முன்னேறும் நோக்கில் மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகள், குழுவில் பெண்கள் ஆதிக்க பலம் பெறுவதற்கான புதிய யுக்திகள், குழு உறுப்பினர்கள் சேகரிக்க வேண்டிய முக்கிய தகவல்கள் பலவற்றை உள்ளடக்கியாதாக நல்ல தலைமை பண்பை வளர்க்கும் விதமாக சுய உதவிக்குழு கையேடு வீற்றிருக்கின்றது. சுய பரிசோதனை செய்து கொள்வதுடன் குழுவினருக்கு ஆலோசனைகளை வழங்கும் தகவல் களஞ்சியமாக கையேடு விளங்குகிறது. நன்றி: தினமலர்(13.3.2013).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *