மார்பகப் புற்றுநோய் விளக்கக் கையோடு

மார்பகப் புற்றுநோய் விளக்கக் கையோடு, டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை- 17; விலை; ரூ.100. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-6.html

மார்பக வளர்ச்சி, புற்றுநோய் எதனால் வருகிறது. அதன் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் பற்றி விளக்கமாக தரப்பட்டுள்ளது. புற்று நோய் சிகிச்சை மேற்கொண்ட பிறகு எப்படி பராமரிக்க வேண்டும் என்றும், உணவு கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறை, பிற சிகிச்சை முறைகள் என நிறைய விவரங்கள் உள்ளன. பெண்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய நூல்.

 —–

வனசாட்சி, தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், 11/29. சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை – 18., பக்கம்: 288, விலை: ரூ 255. To buy this Tamil book online  – www.nhm.in/shop/100-00-0000-811-7.html

கங்கை கொண்டான், கடாரம் வென்றான்’ எனக் கடந்த காலத் தமிழ் வீரம் பேசிக்கொண்டு இருப்பதன் அபத்தம், சில சமயங்களில் பளிச்சென்று முகத்தில் அறையும். பிஜி தீவின் கரும்புத் தோட்டங்களில், தாய்லாந்தின் சயாம் ரயில் பாதைகளில், பர்மாவின் உடல் உழைப்புத் தொழில்களில், மலேசியாவின் தேயிலைத் தோட்டங்களில், தென் ஆப்பிரிக்காவின் உதிரி வேலைகளில், இலங்கையின் மலையகக் காடுகளில்… இங்கெல்லாம் தமிழர்கள் அரசாளச் செல்லவில்லை. அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். நாம் வசதியாகப் பேச மறந்துவிடுகிற இந்த உண்மையின் ஒரு பகுதியைப் பேசுபொருளாகக்கொண்டு வெளிப்படுகிறது தமிழ்மகன் எழுதிய’வனசாட்சி’ நாவல். உலகிலேயே இலங்கைத் தேயிலைதான் தரம்மிக்கது’ என இன்று சொல்லப்படுகிறது. அந்தத் தரம்மிக்க தேயிலையின் ஒவ்வோர் இணுக்கும் தமிழனின் உழைப்பு. அடர்ந்து விரிந்த பிரமாண்ட மலைக் காருகளைச் செப்பனிட்டு, செடிவைத்து, வளர்த்து, கொழுந்து பறித்து, கொடிகளாகப் பெருக்கியது தமிழன். இறுதியில் தெருக்கோடியில் வீசப்பட்டவனும் தமிழந்தான். அந்த வலியை உண்மைக்கு நெருக்கமாக ஒரு நாவலாகப் பதிவுசெய்த விதத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் தமிழ்மகன். வாட்டி வதைக்கும் வறுமை தமிழர்களை இலங்கைத் தீவை நோக்கித் தள்ளுகிறது. ‘அடைவதற்கு ஒரு பொன்னுலகம் கத்திருப்பதாக நம்பவைத்து’ அழைத்துச் செல்கிறார்கள் கங்காணிகள். ஆனால், அங்கே காத்திருப்பது பொன்னுலகம் அல்ல… பொல்லாத உலகம். கடல் காற்றின் உப்பு மேனி எங்கும் ஊசியாய்க் குத்த, கரையில் இறங்கிய கணம் முதல் துன்பம் மட்டுமே அவர்களுக்குப் பரிசு. கங்காணிகள், வெள்ளைக்கரர்களுக்கு ஆள்காட்டிகளாக இருந்து தமிழ்த் தொழிலாளர்களை வாட்டி வதைக்கின்றனர். உணவு இல்லை; ஓய்வு இல்லை; உறக்கம் இல்லை. நோய்கள் தின்ற உயிர்கள் போக எஞ்சியவர்கள் மலையகம் சென்று சேரும் வரையிலான நாவலின் முதல் பாகம், நம் நெஞ்சில் அழுத்தமாக அறைகிறது. தமிழர்களை மிருகங்களைப் போல வேலை வாங்குவதும், எந்தவித வசதிகளும் அற்ற லைன் வீடுகளின் நரக வாழ்க்கையும் கங்காணிகளின் கொள்ளையும் துளித் துளியாக விவரிக்கப்பட்டுள்ளது. பண்டார நாயகா ஒப்பந்தத்துக்குப் பிறகு, மலையகத் தமிழர்கள் மறுபடியும் தமிழ்நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படும் பகுதி நாவலில் முக்கியமான கட்டம். இரண்டு தலைமுறைகளாக உழைத்துச் சீராக்கிய நிலத்தை விட்டு வெளியேற முடியாமல் அவர்கள் தவிக்க, ‘வெளியேறத்தான் வேண்டும்’ என்று இலங்கை அரசு கட்டாயப்படுத்த… அந்தக் காலக்கட்டதில் என்ன நடந்திருக்கும், மலையகத் தமிழர்களின் மன உணர்வு எவ்வகைப்பட்டது என்பதைத் துல்லியமகப் பேசுகிறது நாவல்.. ஒட்டுமொத்தமாக நாவலின் உள்ளடக்கம் புதியதாக இருக்கிறது. அதுவே நம்மை ஈர்த்து, இழுத்துச் செல்கிறது. இதுவரை பேசப்படாத இலங்கை மலையகத் தமிழர்களின் பிரச்சனைகளை உரக்கச் சொல்லிருக்கும் வகையில், நிச்சயம் இது ’வனசாட்சி’தான். நன்றி: ஆனந்த விகடன், 13.3.2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *