சிலம்பொலியார் பார்வையில்

சிலம்பொலியார் பார்வையில், கே.ஜீவபாரதி,  ஜீவா பதிப்பகம், பக்.96, விலை ரூ.80.

நூலாசிரியர் தொகுத்த”பட்டுக்கோட்டையார் பாடல்கள்' என்ற நூலுக்கும், நூலாசிரியர் எழுதிய புதுயுகக் கவிஞனும் புதியவன் குரல்களும் மற்றும் அப்துற்-றஹீம் வாழ்வியல் இலக்கியம் ஓர் ஆய்வு ஆகிய நூல்களுக்கும் தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பனார் எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பே இந்நூல்.

சிலம்பொலி செல்லப்பனாரின் 85 -ஆவது பிறந்த நாள் சிறப்பு மலருக்கு நூலாசிரியர் எழுதிய கட்டுரை பின் இணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களின் சிறப்புகளை சிலம்பொலி செல்லப்பனார் எடுத்துக் கூறுகிறார்.

“மக்களின் இன்றைய தேவைக்கேற்ற புதுமையான கருத்தாட்சி, மக்கள் மொழியில் எழுதியுள்ள எளிய சொல்லாட்சி, கேட்போர் – படிப்போர் மனதில் தைத்து நிற்கும் பாடல் திறனாட்சி ஆகிய முத்திறத்திலும் பட்டுக்கோட்டையார் முத்திரை பதித்திருக்கிறார்' என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களைப் பற்றிய தனது கருத்துகளை முன் வைக்கிறார்.

பாரதியாரைப் பற்றி நூலாசிரியர் எழுதிய கவிதை நூலுக்கான அணிந்துரையில் நூலில் இடம் பெற்றுள்ள பல கவிதைகளை எடுத்துக்காட்டுகிறார் சிலம்பொலி செல்லப்பன். அப்துற்- றகீம் சிறந்த சுயமுன்னேற்ற வாழ்வியல் நூல்களை எழுதக் கூடியவர். அவர் நூல்களைப் பற்றி நூலாசிரியர் ஜீவபாரதி எழுதிய நூலில், அப்துற் – றகீமோடு மாறுபட்டுள்ள கருத்துகளைத் தெரிவிக்கவும் தயங்கவில்லை. இதை சிலம்பொலி செல்லப்பனார் எடுத்துக்காட்டுகிறார். பெண்கள் வேலைக்குப் போவதை அப்துற் -றஹீம் விரும்பவில்லை. இக்கருத்தினை ஜீவபாரதியால் ஏற்க முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

அணிந்துரைகளின் தொகுப்பாக இந்நூல் இருந்தாலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள், அப்துற் – றஹீமின் வாழ்வியல் நூல்கள், பாரதியாரின் பாடல்கள் ஆகியவற்றின் சிறப்புகளைத் தெரிந்து கொள்ள உதவுகிறது. அணிந்துரை என்று மேம்போக்காக எழுதாமல், நூலை முழுக்க படித்துவிட்டு எழுதும் சிலம்பொலி செல்லப்பனாரின் கடும் உழைப்பு வியக்க வைக்கிறது.

நன்றி: தினமணி, 3/2/2020

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *