விதுர நீதி

விதுர நீதி, குறிஞ்சி, 15-21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-471-2.html

மகாபாரதத்தில், திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோரின் தம்பி விதூரர். அவர் ஒரு வேலைக்காரிக்கு பிறந்தவர். ஆதலால், அறிவிலும், ஆற்றலிலும், நீதியிலும் சிறந்த அவரை தாழ்ந்த நிலையிலேயே கவுரவர்கள் வைத்திருந்தனர். பணிப்பெண் ஒருத்தியைத் தான் திருமணம் செய்து வைத்தனர். கவுரவர்கள் தவறு செய்யும்போதெல்லாம் அவர்களை திருத்த முயன்றார் விதுரர். அதனால் துரியோதனன் அவரை வேசி மகனே என்று இகழ்ந்தான். மகாபாரத்தில் மூன்று முக்கிய உபதேசங்கள் உள்ளன. 1. கண்ணன் அர்ச்சுனனுக்குச் சொன்ன பகவத்கீதை 2. பீஷ்மர் பாண்டவர்களுக்கு சொன்ன உபதேசம் 3. விதுரர் சொன்ன நீதிகள். வாழ்க்கைக்கு உதவக்கூடிய உபதேசங்கள் நிறைந்தவை விதுர நீதி. அவற்றைத் தொகுத்துத் தந்திருக்கிறார் என். சிவராமன். எளிய நடை. பயனுள்ள புத்தகம். நன்றி; தினத்தந்தி, 4/4/2012.  

—-

 

இந்திய அஞ்சல் வரலாறு (தமிழ்நாடு ஒரு கண்ணோட்டம்), இமயா பதிப்பகம், 6/11, ராமகிருஷ்ணா தெரு, நேரு நகர், குரோம்பேட்டை, சென்னை 44, விலை 150ரூ.

150 ஆண்டுகால இந்திய தபால்துறையின் தோற்றம், வளர்ச்சி, முன்னேற்றம், தொடர் சேவை குறித்த தகவல்கள் புத்தகத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் தபால் துறையின் வளர்ச்சி, தமிழ்நாட்டுடன் தொடர்புடைய, இதுவரை வெளியான தபால் தலைகளின் விவரம், பாரம்பரிய புகழோடு தமிழகத்தில் உள்ள 150 ஆண்டுகால பழமையான தபால் அலுவலகங்கள், தபால்தலை சேகரிப்புக்கலை பற்றிய விவரம் மட்டுமின்றி தபால் துறை சார்ந்த பல தகவல்களும், அரிய புகைப்படங்களும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இவை மட்டுமின்றி, ஆறாம் ஜார்ஜ் காலத்து தபால்தலைகள், வரலாற்றில் இடம் பெற்றுள்ள சிறப்பு தபால்தலைகளின் புகைப்படங்களும், வரலாற்றுச்சின்னங்களாக திகழும் பழமை வாய்ந்த தபால் நிலைய கட்டிடங்களின் புகைப்படங்களும், அன்று முதல் இப்போது வரையில், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு தபால்களைக் கொண்டு செல்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் போன்ற தகவல்களும், வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள் என பல்வேறு தகவல்கள் அடங்கிய அரிய பொக்கிஷமாக இப்புத்தகம் அமைந்துள்ளது. ஆசிரியர் தலைமைத்தபால் அதிகாரி முனைவர் க. ராமச்சந்திரன். நன்றி; தினத்தந்தி, 4/4/2012.

Leave a Reply

Your email address will not be published.