ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னையின் பொன்மொழிகள்

ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னையின் பொன்மொழிகள், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.

புதுவையில் ஆசிரமம் அமைத்து லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழி காட்டிய அரவிந்தர், அன்னை ஆகியோரின் பொன்மொழிகள் அடங்கிய புத்தகம். அழகிய கட்டமைப்புடன் கண்ணைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. தினத்தந்தி.  

—-

 

எளிய செரிமான உணவுகள், வை. குமரவேல் என்ற சகாதேவன், தாமரை  பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.

உணவே மருந்து என்ற கருத்தை உணர்த்துவதற்காகவும், அன்றாடம் நம்முடைய உணவு முறைகளில் நாம் சேர்த்து கொள்ள வேண்டியது, தவிர்க்க வேண்டியதை தெரிவித்திருப்பதுடன், உணவின் அவசியம் எப்படி முக்கியமானதோ, அதேபோல் உணவின் அளவும் முக்கியமானது என்பதும் வலியுறுத்தப்படுள்ளது. தினத்தந்தி.  

—-

உலகை கலக்கிய ஆங்கில இலக்கியங்கள், ரா. வேங்கடசாமி, எஸ்.எஸ். பப்ளிகேஷன், சென்னை, விலை 100ரூ.

இலக்கிய உலகில் சிறந்தவையாகப் போற்றப்பட்ட இலக்கியச் செல்வங்களை அனைவரும் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும். பரவசமடைய வேண்டும் என்ற நோக்கில் 85தலைப்புகளில் எழுதப்பட்ட இலக்கிய குறிப்புகளின் தொகுப்பாகும். தினத்தந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *