அகிம்சையின் சுவடுகள்

அகிம்சையின் சுவடுகள், ப. முத்துகுமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 360, விலை 260ரூ.

மகாத்மா காந்தியடிகள், மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர் ஆகிய இரு தலைவர்களைப் பற்றி விவரிக்கிறது இந்நூல். காந்திஜியின் கொள்ளையால் ஈர்க்கப்பட்ட லூதர் கிங், 1895 ஆம் ஆண்டில் தொடங்கி 1965 ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஆப்ரிக்க மக்களின் உரிமைகளுக்காக நடத்திய எண்ணற்ற போராட்டங்கள் காந்திய வழிப் போராட்டங்கள்தாம். காந்திஜியின் வழிமுறை, அமெரிக்காவில் பயன்படுத்தக் கூடியத என்பதை 1920களிலேயே அமெரிக்க கறுப்பின மக்கள் உணர்ந்திருந்தனர். இந்தப் போராட்டத்தின்போது பள்ளிச் சிறார்கள்கூட சிறை சென்றதும் வியப்பை ஏற்படுத்துகிறது. காந்திஜியை மார்டின் லூதர் கிங் உள்ளிட்ட எண்ணற்ற அறிஞர்கள் சந்தித்து உரையாடிய உரையும், நேர்காணலில் காந்திஜியின் தெளிவான பதில்களும் இந்த நூலில் இடம் பெற்றிருப்பது சிறப்பானதாகும். மார்ட்டின் லூதர் கிங்கின் இறுதிச் சொற்பொழிவு (03.04.1968)- தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளதும் சிறப்பு. நன்றி: தினமணி, 16/3/2015.

Leave a Reply

Your email address will not be published.