அனைத்து நோய்களுக்கும் செலவு இல்லாத எளிய மருத்துவ முறைகள்

அனைத்து நோய்களுக்கும் செலவு இல்லாத எளிய மருத்துவ முறைகள், டாக்டர் ஜெ. ஜெயலட்சுமி, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, பக். 975, விலை 750ரூ.

இவ்வளவு பெரிய நூலா என்று மலைப்பு ஏற்பட்டாலும் புரட்டிப் பார்த்தவுடன் முழுவதையும் படித்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் தொற்றிக்கொள்கிறது. காரணம், பைசா செலவில்லாமல் நமது நோய்களை நாமே தீர்த்துக் கொள்ளும் எளிய மருத்துவ முறைகளை வரைபடம், புகைப்படம், செய்முளை என்று மிக எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. ஹோமியோபதி, அக்குபங்சர், அக்குபிரஷர், யோகா, முத்திரைகள், நேச்சுபதி, ஆரிகுலோதெரபி, பிரானிக் ஹீலிங், ரெய்கி என்று பல மருத்துவ முறைகளை கற்று தேர்ச்சிபெற்றுள்ள இந்நூலாசிரியர், இந்நூலில் முதல் ஐந்து வகையான மருத்துவ முறைகளை அறிமுக விளக்கத்தோடு, இதன் மூலம் எவ்னென்ன நோய்களை, எப்படி குணப்படுத்தலாம், ஒவ்வொரு மருத்துவமும் மனித உடற்கூறில் எப்படிச் செயல்படுகிறது, எப்படி நிவாரணம் கிட்டுகிறது, நாம் இதை கற்றுக் கொள்வது எப்படி என்று A to Z வரை படங்களோடு எளிமையாக விளக்கியுள்ளார்,  குறிப்பாக சர்க்கரை நோய், நுரையீரலைப் பாதிக்கம் ஆஸ்துமா, ஸைனஸ், நிமோனியா, சிறுநீரக நோய்கள், மனநலக் குறைபாடுகள், நரம்பு மண்டலம் சார்ந்த நோய்கள், நாளமில்லா சுரப்பிகள் குறித்த நோய்கள், மகளிர் சம்பந்தப்பட்ட நோய்கள் என்று எல்லா நோய்களுக்குமான மருத்துவ முறைகள் இந்நுலில் விளக்கப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் ஏற்கெனவே பல்வேறு பத்திரிகைகளில் எழுதிய மருத்துவக் கட்டுரைகள், தொலைக்காட்சி உரைகள் என்று பலவும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. எல்லா நோய்களுக்கும் தீர்வு கூறும் இந்நூல், ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டியது அவசியம். -பரக்கத். நன்றி: துக்ளக், 12/11/2014.

Leave a Reply

Your email address will not be published.