அம்ருதா

அம்ருதா, திவாகர், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 448, விலை 335ரூ.

கங்கை கொண்ட ராஜேந்திர சோழ சக்கரவர்த்தியின் மகளான அம்மங்கையின் வயிற்றில் பிறந்தவர் அபயன். தெலுங்கு ராஜாவான அபயன் சோழ தேசத்து ஆட்சியை எப்படிப் பிடித்தார், பரந்து விரிந்த சோழ தேசத்தை எப்படி ஆட்சி செய்தார் என்பதே கதைக்களம். சோழர்கள் காலத்தில் உறவுகளுக்குள் நெருக்கம் ஏற்படவும், நிலையான ஆட்சிக்கும் பயன்பட்டு வந்த திருமணம், எப்படி சோழர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக மாற்றியது, பெண்கள் அரசியலில் எவ்வாறெல்லாம் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்பட்டனர் என்பதை விளக்கும் வண்ணம் கதை அமைந்துள்ளது. சாதிப் பிரிவினையைத் தூண்டிவிட்டு இடங்கையினர், வலங்கையினர் எனப் பிரித்து மக்களிடம் பகைமையை ஏற்படுத்தியது போன்றவை அரசியல் செய்வோருக்கு எவ்வாறெல்லாம் உதவியது என்பதைத் தெளிவுபடுத்தியது. வரலாற்று ஆதாரப் பின்புலமும், நூலாசிரியரின் கற்பனையும் இந்நாவலின் கதையை அழகுறச் செய்துள்ளது. நன்றி: தினமணி, 23/3/2015.

Leave a Reply

Your email address will not be published.