இந்திரா சந்திரா மந்திரா

இந்திரா சந்திரா மந்திரா, கல்கி பதிப்பகம், கல்கி பில்டிங்ஸ், 47, என்.பி. ஜவகர்லால் நேரு சாலை, ஈக்காடுதாங்கல், சென்னை 32, விலை 50ரூ

பெரியவர்களுக்காக பல சிறந்த நாவல்களை எழுதியுள்ள கல்கி ராஜேந்திரன், சிறுவர்களுக்காகவும் பல்வேறு புனை பெயர்களில் கதைகள் எழுதியுள்ளார். ஜெயந்தி என்ற புனை பெயரில் அவர் எழுதிய இந்திரா சந்திரா மந்திரா என்ற நாவல் கோகுலத்தில் தொடர்கதையாக வெளிவந்தது. இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. சிறுவர் சிறுமிகள் புத்தகத்தைக் கையில் எடுத்தால் முடிக்கும்வரை கீழே வைக்க மாட்டார்கள். அவ்வளவு விறுவிறுப்பு. நன்றி: தினத்தந்தி, 11/12/13.  

—-

 

இவர்களுக்குப் பின்னால், சூர்யா பதிப்பகம், 9, தேவநாதன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 70ரூ.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். அது உண்மையா? என்ற கேள்விக்கான விடை இந்நூல். அன்னை சாரதாதேவி, ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ஆன்மிக வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர் மகாத்மா காந்தி. வேரை விட்டு விலகாதவர் கஸ்தூரிபாய். தன் கணவன் கார்ல் மார்க்ஸின் கொள்கைக்காக வறுமையை தாங்கிக் கொண்டவர் ஜென்னி. லெனினுடன் பல போராட்டங்களில் பங்கேற்றவர் குருப்ஸ்கயா, மணியம்மை, நாகம்மை பெரியாரின் சகோதரி கண்ணம்மாள் ஆகியோர் பெரியாரின் கொள்கைக்காக இரவு பகலாக பாடுபட்டவர்கள். இப்பெண்மணிகளைப் பற்றிய வாழ்க்கை சிறப்பை கருத்து சிதறாமல் தொகுத்தளித்துள்ளார் சூர்யா சரவணன். நன்றி: தினத்தந்தி, 11/12/13.

Leave a Reply

Your email address will not be published.