உன் மீதமர்ந்த பறவை

உன் மீதமர்ந்த பறவை, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 60ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-230-0.html கவிஞனின் ஆழ்மன அனுபவங்கள் சொற்களாக மாறும்போது கவிதைகள் பிறக்கின்றன. அவை அனுபவத்தை தொடர, உணர, பழநிபாதியின் இந்த கவிதைத் தொகுப்பை படிப்போர் உணரலாம். தொடர முடியாத நிழலைத் தொட வைக்கிறார். பார்க்க முடியாத உயிரைப் பார்க்க வைக்கிறார். வாசம் நுகர முடிகிற கவிதையின் ஆழத்திற்குள் செல்ல உவமை, படிமம் என்ற துணையை அனுப்புகிறார். பெண் என்ற கண்ணாடியைப் பார்த்து மழை தன் முந்தானையைச் சரி செய்து கொண்டதாம். உன்னைப் பார்த்த இரவை விட அழகானது உனக்குள் பார்த்த இரவு என்று கவிஞனின் அடிவானத்தில் நம்மை பறக்க விட்டு கரைந்து போகவைக்கிறார். கவிதையின் ஆழத்தைக் கண்டடைய தொகுப்பு முழுவதும் தேட வைக்கிறார். நன்றி: குமுதம், 21/5/2014.  

—-

வாரியார் எழுதிய மகாபாரதம், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை, விலை 217ரூ.

மிகப்பெரிய இதிகாசமான மகாபாரதம் பல சிறப்புகளைக் கொண்டது. கணக்கற்ற கதாபாத்திரங்கள் பவனி வரும் இக்கதையை திருமுருக கிருபானந்த வாரியார், உள்ளத்தைத் தொடும் வகையில் எழுதியுள்ளார். பாண்டவர்கள் ஐந்து பேர்களை பாஞ்சாலி ஏன் மணந்தாள் என்பது பலரும் கேட்கும் கேள்வி. அதுபற்றி விரிவாக எழுதியுள்ளார் வாரியார். பாஞ்சாலி, முற்பிறப்பில் கற்புக்கரசியான நளாயனி. சிவபெருமானிடம் கேட்ட வரத்தால், நளாயனி மறுபிறப்பில் பாஞ்சாலியாகப் பிறக்கிறாள். ஐந்து தேவர்கள், பாண்டவர்களாகப் பிறக்கிறார்கள். மனிதத் தர்மப்படி ஒரு பெண் ஐவரை மணப்பது குற்றம். ஆனால் தேவலோக தர்மத்தின்படி குற்றம் அல்ல. கடல் நீரை ஒரு கமண்டலத்துக்குள் அடைப்பதுபோல், மாபெரும் மகாபாரதத்தை 512 பக்கங்களில் திறமையுடன் அடக்கியுள்ளார் வாரியார். நன்றி: தினத்தந்தி, 21/5/2014.

Leave a Reply

Your email address will not be published.