கண்ணகி அம்மன் வழிபாடு

கண்ணகி அம்மன் வழிபாடு, பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், சென்னை, விலை 130ரூ.

இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கற்புக்கரசி கண்ணகி இறுதியில் தெய்வநிலை பெற்றாள். கேரள மாநிலம் மங்கல தேவி மலையில் சேரன் செங்குட்டுவன் கண்ணகி தேவி கோவிலைக் கட்டினான். மேலும் இதுபோல பல்வேறு பெயர்களில் கண்ணகி கோவில்கள் உள்ளன. இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள இனத்தவரால் கண்ணகி வழிபாடு மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கேரளாவிலும் ‘பகவதி’ என்று பயபக்தியோடு வணங்கப்படுகிறாள். இதேபோல் தமிழகத்திலும், ‘பெருகட்டும் கண்ணகி அம்மன் வழிபாடு’ என்று கூறுகின்ற இந்த நூலாசிரியர் யாணன், அதனால் ‘அறநெறிகள் வளரும்; சமூகத்தில் நீதி நேர்மை மதிக்கப்படும்’ என்று நம்பிக்கை விதைகளைத் தூவுகிறார். நன்றி: தினத்தந்தி, 18/3/2015.  

—-

 அக்கா, துளசி கோபால், சந்தியா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.

பொதுவாக, எல்லாக் குடும்பங்களிலும் அக்காக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல். நன்றி: தினத்தந்தி, 24/3/2015.

Leave a Reply

Your email address will not be published.