கல்கியின் முத்திரைக் கதைகள்

கல்கியின் முத்திரைக் கதைகள், செல்லப்பா பதிப்பகம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை 1, விலை 100ரூ.

தமிழ்நாட்டின் மாபெரும் எழுத்தாளரான கல்கி எழுதிய 12 சிறந்த சிறுகதைகள் கொண்ட நூல் இது. ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கதைகள். ஆயினும் இன்று பூத்தமலர் போல மணம் வீசுகின்றன. கல்கியின் கதைகளுக்கு வயதே இல்லை. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ம. திருமலை, கல்கியின் கதைகளை எல்லாம் படித்துப் பார்த்து, ஆராய்ந்து இந்த 12 கதைகளை முத்திரைக் கதைகளாகத் தேர்வு செய்துள்ளார். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அந்தக் காலத்திலேயே கல்கி உரத்தகுரலில் முழங்கி இருக்கிறார் என்பதை சில கதைகள் எடுத்துக்காட்டுகின்றன. பேராசிரியர் ம. திருமலை எழுதிய கல்கி ஓர் அற்புதச்சுடர், கல்கி ஒரு சுதேசிக் கதாசிரியர் என்ற இரு கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. கல்கியின் சிறப்பை எடுத்துக் கூறுவதுடன், சிறுகதை இலக்கியம் பற்றிய அரிய தகவல்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.  

—-

 

பொது அறிவூட்டும் 1000 தகவல்கள், சா. அனந்தகுமார், அமராவதி பதிப்பகம், 59, ஆடம் தெரு, மயிலாப்பூர், சென்னை 4.

பொது அறிவூட்டும் 1000 தவல்களுடன் வெளிவந்துள்ள இந்நூலை எழுதியவர் சா. அனந்தகுமார். பொதுத் தேர்வுகள் எழுதுவோருக்கும் மாணவ மாணவியருக்கும் மிகவும் பயன்படும் நூலின் விலை 90ரூ. இதே நூலாசிரியர் எழுதியுள்ள இரண்டாம் பாகத்துக்கு தெரிந்துகொள்வோம் 100 செய்திகளை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் விலை 60ரூ. நன்றி: தினத்தந்தி,6/11/13

Leave a Reply

Your email address will not be published.