சிந்தையிலே வாசம் செய்யும் சித்தர்களின் சுவாசம்

சிந்தையிலே வாசம் செய்யும் சித்தர்களின் சுவாசம், டாக்டர் குரூப்ரியன், பேராசிரியர் அர்த்தநாரீஸ்வரன், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 75ரூ.

கபிலர், காகபுஜண்டர், போகர், பட்டினத்தார், திருமூலர், பாம்பாட்டி சித்தர், அகஸ்தியர், குதம்பைச்சித்தர் உள்பட சித்தர்களின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்களின் சிறப்புகளையும் எடுத்துக் கூறும் நூல். சித்தர்கள் பற்றி அறிய விரும்புவோருக்கு மிகச்சிறந்த புத்தகம்.  

—-

 

ஸ்ரீ நாலாயிர திவ்யப் பிரபந்தம், எஸ். ஜெகத்ரட்சகன், வேமன் பதிப்பகம், 19, நியூ காலனி, நுங்கம்பாக்கம், சென்னை 34, விலை 770ரூ (4 பாகங்கள்).

நான்கு வேதங்களின் சாரம் என்று போற்றப்படும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் விளக்க உரையை, கல்வியாளரும், மத்திய இணை அமைச்சருமான எஸ். ஜெகத்ரட்சகன் எழுதியுள்ளார். இப்போது இது 4 பாகங்களாக வெளிவந்துள்ளது. திருமாலைப் போற்றி புகழ்ந்து 12 ஆழ்வார்கள் பாடிய பாடல்களுக்கு எளிய தமிழில் விளக்கமும் தந்துள்ளார் நூலாசிரியர். ஒவ்வொரு பாடல்களுடன் அவற்றுக்கு உரிய தமிழ் விளக்கம் அத்துடன் ஆங்கில விளக்கமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பாடல்களுக்கான விளக்கம் அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும்படி அமைத்திருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 15/2/2012.

Leave a Reply

Your email address will not be published.