செவ்வந்திப்பூ சிங்காரி

செவ்வந்திப்பூ சிங்காரி, விக்ரமன், யாழினி பதிப்பகம், 18, அம்பர்சன் தெரு, பிராட்வே, சென்னை 108, விலை-ஒவ்வொரு புத்தகமும் ரூ. 75.

விக்ரமன் எழுதிய சமூக சிறுகதைகள் சரித்திர நாவல்கள் எழுதுவதில் புகழ்பெற்ற விக்கிரமன், சமூக நாவல்கள், சிறுகதைகள் எழுதுவதிலும் முத்திரை பதித்தவர். அவர் எழுதிய சிறந்த சமூகக்கதைகள் செவ்வந்திப்பூ சிங்காரி, சந்திரமதி பொன்னையா, அழகின் நிறம் ஆகிய மூன்று புத்தகங்களாக வெளிவந்துள்ளன. மூன்று புத்தகங்களிலும் மொத்தம் 52 கதைகள் இடம் பெற்றுள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட கவிதைகளும் இப்போது எழுதப்பட்டவைபோல இளமையுடன் உள்ளன. அமரர் கல்கியைத் தன் மானசீக குருவாக வழிபடுபவர் விக்கிரமன். அதனால் கதாபாத்திரங்களை உயிரோவியங்களாகப் படைப்பதிலும், திருப்பங்களுடன் கதையை விறுவிறுப்பாகக் கொண்டு போவதிலும் முழு வெற்றி பெற்றுள்ளார். ஒவ்வொரு கதையையும் வாசன், மகரிஷி, ராஜேந்திரகுமார், ஜோதிர்லதா, கிரிஜா, பி.வி.ஆர், போன்ற பிரபல எழுத்தாளர்கள் மதிப்பீட செய்து இருப்பது புதுமை.  

—-

 

மக்கள் மன்றத்தில் நான், தர்மசந்த் பதிப்பகம், 6, மீனாட்சியம்மன் கோவில் தெரு, மதுராந்தகம், காஞ்சிபுரம் மாவட்டம் 603306, விலை 250ரூ.

மதுராந்தகம் தொகுதி சட்டசபை உறுப்பினராக இருந்த எஸ்.டி. உகம்சந்த், அப்போது சட்டசபையில் ஆற்றிய உரைகள், தொடுத்த வினாக்கள் ஆகியவை அடங்கிய நூல் இது. தொகுதி மக்களுக்காக அவர் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி உரிமைக்காக போராடியதை நூல் விவரிக்கிறது.  

—-

 

முற்றத்து மரங்கள், கை. அறிவழகன், தகிதா பதிப்பகம், 4/833, தீபம் பூங்கா, கே. வடமதுரை, கோவை 641017, விலை 100ரூ.

கலப்படம் இல்லாத தூய தமிழில் சுவாரசியமாக அதே சமயம் வாழ்க்கை ஓட்டத்தில் இடம் பிடிக்கும் உணர்ச்சிகளை உள்ளடக்கிய சிறு கதைகளின் தொகுப்பை கொடுத்து இருக்கிறார் ஆசிரியர் கை. அறிவழகன். நன்றி: தினத்தந்தி, 12/9/2012.

Leave a Reply

Your email address will not be published.