ஜாமக்கோள் பிரசன்னம்

ஜாமக்கோள் பிரசன்னம், ஆர். செல்வம், புஞ்சை புளியம்பட்டி மற்றும் இருவர், வெளியீடு ஜெமினி பதிப்பகம், பக்கம் 272, விலை 270 ரூ

ஜோதிடக்கலை வேதத்தின் ஓர் அங்கமாகும். அதில் பிரசன்னம் என்பதும் ஒரு பகுதி. இந்நூல் ஜாமக்கோள் பிரசன்னம் பற்றி, ஜோதிட நூல் சமண, சமய முனிவர்களில் ஒருவராகிய ஜைனமுனி முதல் இன்றைய நாள் வரை ஜாமக்கோள் பிரசன்னம் வளர்ந்தவிதம், அதன் வரலாறு, அதன் பயன் என தகவல்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. கல்வி, திருமணம், காணாமல் போன பொருள் எங்கே கிடைக்கும் என்று பல்வேறுபட்ட தலைப்புகளில் இதன் நூல் ஆசிரியர்கள் மூவரும், அவர்களின் பண்பட்ட அனுபவத்தின் மூலம் பல ஆய்வுகள் செய்து தந்துள்ளனர்.  

சிந்தித்ததும் சந்தித்ததும்கவியூர் லட்சுமி நாராயணதாசன், இலவச பதிப்பு

மனிதனை உயரிய நிலைக்கு உயர்த்த வழி அற வாழ்க்கை ஆகும். அதைப் படம் பிடிக்கும் சம்பவங்கள், தகவல்களை 108 எண்ணிக்கையில், ஆசிரியர் தொகுத்திருக்கிறார். இறைவன் மீது பற்று ஏற்படுத்த உதவும் ஆன்மிக நூல்.   நன்றி: தினமலர் 16-09-12    

Leave a Reply

Your email address will not be published.