ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும்

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக். 288, விலை 180ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-284-1.html நக்கீரர், கபிலர், அவ்வை, கம்பன், பாரதி, வ.உ.சி., கவிமணி, பெரியார், லெனின், உமர் கய்யாம் முதலான கவிஞர்களையும், அறிஞர்களையும் பார்த்தும் படித்தும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ப. ஜீவானந்தம் பெற்ற அனுபவங்களின் தொகுப்புதான் இந்த நூல். 56 தலைப்புகளில், 56 அறிஞர்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் ஜீவா. அவரின் உரைகள், புத்தக மதிப்புரைகள், அணிந்துரைகள் முதலானவற்றின் தொகுப்பை உள்ளது உள்ளபடி நமக்கு தொகுத்து தந்துள்ளார், நூலாசிரியர் ஜீவபாரதி. பிறர் தொகுத்த தொகுப்பிலிருந்து எடுத்து பயன்படுத்தும்போது, அந்தத் தொகுப்பை வழங்கிய ஆசிரியரின் பெயரையும் குறிப்பிட்டிருப்பது, தொகுப்பாசிரியரின் நேர்மையைக் காட்டுகிறது. ஜீவாவின் இலக்கிய ஆளுமையில், சங்க இலக்கியங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதை, இந்த நூல் தெள்ளத் தெளிவாக்குகிறது. நன்றி: தினமலர், 25/1/2015.  

—-

அமானுஷ்யன், என். கணேசன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ், விலை 500ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-284-7.html மர்ம நாவல் என்றால், தொடக்கத்திலும், இறுதியிலும் எதிர்பாராத திருப்பங்கள் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் 600க்கும் மேற்பட்ட பக்ககங்களைக் கொண்ட இந்த நாவலில், பக்கத்துக்குப் பக்கம் மர்மத்தை தொடந்து எடுத்துச்சென்று இருப்பதால், ஒரே மூச்சில் படித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. நாவலின் கதாநாயகனான அமானுஷ்யன் சக்திவாய்ந்த அக்ஷய், படிப்பவரின் மனதில் நீங்காத இடம்பெற்றுவிடுவது உறுதி. எதிர்பாரத ஏராளமான மர்ம முடிச்சுகள், அதுதுடன் ஆன்மிகம், வர்மக்கலை, மெலிதான காதல் என்று கலந்து கொடுக்கப்பட்டு இருப்பது கூடுதல் சுவாரசியம் அளிக்கிறது. நன்றி: தினத்தந்தி, 5/11/2014.

Leave a Reply

Your email address will not be published.