தமிழ்வேள் கோ. சாரங்கபாணி

தமிழ்வேள் கோ. சாரங்கபாணி, இலக்கிய வீதி, 52/3, சவுந்தர்யா குடியிருப்பு, அண்ணாநகர் மேற்கு விரிவு, சென்னை 101, விலை 200ரூ.

திருவாரூர் மாவட்டம் விஜயபுரத்தைச் சேர்ந்தவர் தமிழ்வேள் கோ. சாரங்கபாணி. சிறந்த பத்திரிகையாளர், எழுத்தாளராக அரை நூற்றாண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றியவர். தமிழ் இலக்கியத்திலிருந்து சமுதாயப் பிரச்சினைகள், அரசியல் கருத்துகள் வரை ஆழ்ந்த அறிவும், அவற்றைத் தெளிவாகப் பேச்சிலும், எழுத்திலும் எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர். இவருடைய வாழ்க்கை வரலாற்றை நூலாசிரியர் ஜே.எம். சாலி நூலாக தொகுத்துள்ளார். தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் மாமனார் வள்ளல் உ. ராமசாமி நாடார் பற்றிய உயரிய சிந்தனைகள் மற்றும் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் பற்றிய பல்வேறு அரிய புகைப்படங்களும் குறிப்புகளும் நூலில் இடம் பெற்றுள்ளது சிறப்பாகும்.  

—-

 

சிலப்பதிகாரத்தில் ஐந்திணைக்குரிய முப்பொருள்கள், மருதம் கோமகன், கோமகன் பதிப்பகம், 479 ஏ, 8வது தெரு, பாரதிநகர் தெற்கு, கும்பகோணம் 612001, விலை 100ரூ.

தமிழர்கள் உருவாக்கிய இலக்கண நூல்கள் காட்டும் ஐந்திணைகள் பற்றிய செய்திகளை விளக்கி கூறுகிறது. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் ஐந்திணைகளுக்கு உரிய முப்பொருள்களை இயற்றினார். அந்த முப்பொருள்களான முதற்பொருட்கூறுகள், உரிபொருட்கூறுகள், கருப்பொருட்கூறுகள் ஆகியவை சிலம்பில் எவ்வாறு இடம்பெற்றிருக்கின்றன என்பதை ஆசிரியர் விளக்கத்துடன் இந்நூலில் தொகுத்துள்ளார்.  

—-

 

சொல்வதைக் கேளுங்கள், ஹாஜி தொலைப்பேசி மீரான், மீரான் பதிப்பகம், 47/2, யானைக்குளம் முதல் தெரு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 120ரூ.

உளி முதல், நாய், காக்கை, நரி, தண்டவாளம் வரை பல்வேறு பொருட்களும், உயிர்களும் பேசுவதாக அமைத்து, அவற்றின் மூலம் நூலாசிரியர் தனது சிந்தனைகளை, சமூக நலக்கருத்துகளை வழங்கியிருக்கிறார். வித்தியாசமான முயற்சி. நன்றி: தினத்தந்தி, 21/8/2013.

Leave a Reply

Your email address will not be published.