பிரபல கொலை வழக்குகள்

பிரபல கொலை வழக்குகள் எஸ்.பி.சொக்கலிங்கம்(வெளியிட்டோர்: கிழக்கு பதிப்பகம், 57, பி. எம். ஜி. காம்ப்லக்ஸ், ரெத்னாபவன் ஓட்டல் எதிர்புறம், தெற்கு உஸ்மான் ரோடு, தியாகராயர் நகர், சென்னை – 17; விலை: ரூ. 140) To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-787-9.html

ஆஷ் கொலை, லட்சுமி காந்தன் கொலை, சிங்கம்பட்டி கொலை, பாவ்லா கொலை, பகூர் கொலை, ஆலவந்தான் கொலை, நானாவதி கொலை, எம்.ஜி.ஆர். சுடப்பட்டது, விஷ ஊசி, மர்ம சந்நியாசி ஆகிய வழக்குகளின் விபரங்கள் அடங்கியது “பிரபல கொலை வழக்குகள்” என்ற புத்தகம். இதனை, வக்கீலாக பணியாற்றும் எஸ்.பி.சொக்கலிங்கம் எழுதி உள்ளார். கிரைம் நாவல்களைவிடவும் சுவாரஸ்யமான, விறுவிறுப்பான பல பிரபலமான கொலை வழக்குகளும், பின்னணி விசாரணைத் தகவலும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எம்.ஜி.ஆரைச் சுட்ட எம். ஆர். ராதா தொடர்பான எம்.ஜி.ஆர் கொலை முயற்சி வழக்கு எப்படி நடத்தப்பட்டது என்று குறித்து அரிய தகவல்களையும் நூலாசிரியர் அளித்துள்ளார். பிரபல கொலைகள் பற்றி அறிந்து கொள்ள இந்தப்புத்தகம் ஒரு சிறந்த ஆவணமாகும். நன்றி: சென்னை (13.3.2013).  

—–

நபித்தோழர்கள் வரலாறு (வெளியீடு: நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராயநகர், சென்னை – 17, விலை:ரூ.140)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களோடு நேரடியாகப் பழகும் பாக்கியம் பெற்றவர்கள் நபித்தோழர்கள். இவர்கள் அரபி மொழியில் ‘ஸஹாபா’க்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.”தினத்தந்தி” ஆருள்தரும் ஆன்மிகம் மலரில், வடக்குக் கோட்டையார் வி. எம். செய்யது அகமது எழுதிய 39 நபித்தோழர்களின் வரலாறு இப்போது நூலாக வெளிவந்துள்ளது. இந்த நூலைப் படிக்கும்போது நபித்தோழர்கள் கொள்கைப் பிடிப்பில் கொண்ட உறுதியும், மரணத்தைக் கண்டு அஞ்சாத அவர்களின் நெஞ்சுரமும் நம் உள்ளத்தை உலுக்கிறது. போர்க்களக் காட்சிகள் நம் கண்களைக் குளமாக்குகிறது. அனைத்துத் தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் இனிய தமிழில் எளிய நடையில் இந்த நூல் அமைந்துள்ளது. நன்றி: சென்னை (13.3.2013).  

—–

பரிசு பெற்ற கதைகள் (வெளியிட்டோர்: வசந்தா பிரசுரம், 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 33, விலை: ரூ. 300)

”தினமலர்” நிறுவனர் டி. வி. இராமசுப்பையர் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதைகள் கொண்ட தொகுப்பு நூல். 2002 -ம் ஆண்டு முதல் 2009 -ம் ஆண்டு வரை பரிசு பெற்ற 65 சிறுகதைகள் இதில் அடங்கியுள்ளன. போட்டியில் வெற்றி பெற்ற கதைகள் என்பதால், கதைகள் தரமானவையாக அமைந்திருப்பதில் வியப்பில்லை. புதுமுக எழுத்தாளர்கள் கூட தங்கள் எழுத்துத் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நன்றி: சென்னை (13.3.2013).  

Leave a Reply

Your email address will not be published.