மாமனிதர் நரேந்திரமோடி

மாமனிதர் நரேந்திரமோடி, திருக்குடந்தை பதிப்பகம், சென்னை, விலை 25ரூ.

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குஜராத் முதல் மந்திரி – பிரதமர் வேட்பாளர் இப்படி பல சிறப்புகள் பெற்ற நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும், அழகாகவும் எழுதியுள்ளார் முக்தா சீனிவாசன். நன்றி: தினத்தந்தி, 9/4/2014.  

—-

ஸ்ரீ அருணாசல பஞ்சரத்தினம், முகவைக் கண்ண முருகனடிமை, ஸ்ரீரமண பக்த சமாஜம் வெளியீடு, சென்னை, விலை 80ரூ.

ரமண மகரிஷி அருளிய அருணாசல பஞ்சரத்னத்திற்கு எழுதப்பட்ட புதிய விரிவுரை. புலமையும் பக்தியும் பளிச்சிடும் பஞ்சரத்தினத்தின் மைய கருத்து, பாடல்களில் அமைந்துள்ள கருத்துத் தொடர்பு, உலகின் பொய்மை, காயத்திரி மந்திரத்துடன் ஒப்பீடு போன்ற பகுதிகள் நூலின் அழகுக்கு அழகு கூட்டுகின்றன. நன்றி: தினத்தந்தி, 9/4/2014.  

—-

தமிழ் புதினங்களில் ஒடுக்குதலும் பிரச்சினைகளும், முனைவர் நா. கலைவாணி, காவ்யா, சென்னை, விலை 140ரூ.

சமுதாயத்தில், பாலினத்தில், பொருளாதார அடிப்படையில், சாதியில்என அனைத்து பிரிவிலும் ஒருவரை மற்றொருவர் அல்லது ஒரு பிரிவினரை மற்றொரு பிரிவினர் வார்த்தையாலும், நடவடிக்கையாலும் அடக்குவது மற்றும் அதற்கான தீர்வுகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 9/4/2014.

Leave a Reply

Your email address will not be published.