மீரா

மீரா, இரா. மோகன், சாகித்ய அகாடமி, பக். 112, விலை 50ரூ.

To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024735.html ‘மரபில் பூத்த புதுமலர்’ என்றும், ‘காலத்தின் குரல்’ என்றும், ‘பாவேந்தரின் வாரிசு’ என்றும் திறனாய்வாளர்களால் மதிப்பிடப்பெற்ற மீரா (மீ.ராசேந்திரன்) இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கவிதை உலகில் தமக்கென தனியிடம் வகுத்துக்கொண்ட ஆற்றல்சால் ஆளுமையாளர். ‘கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்’ எனும் புதுக்கவிதை நூல் மூலம், 1980களில், கல்லூரி மாணவர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்தவர். அவரது படைப்புகளில் அங்கதச் சுவை ஆழ்ந்து விரிந்து கிடக்கும். அரசியல்வாதியின் பதவி ஆசையை தோலுரிக்கும் வகையில், ‘அப்புசாமியின் அப்பா ஆனைமாதிரி இருந்தபோது எம்.பி., பதவி இறந்தபோது சிவலோக பதவி’ எனச் சுட்டும் இடத்திலும், ஊழல் அரசியல்வாதிகளைப் பற்றி, ‘உன்னைப் பெற்ற தந்தைக்கு உன்னைத் தானே அடிக்கத் தெரியும். என்னைப் பெற்ற தந்தைக்கு இந்த ஊரையே அடிக்கத்தெரியும்’ என்று பாடும்போதும், ‘திருமணப் பந்தியில் எதுவும் பேசாது எங்கள் தலைவர் எட்டி உதைத்தார்; வறுமை வேகவேகமாய் வெளியேறிற்று பரட்டைத்லையும், எலும்பும் தோலும் கிழிந்த கந்தையுமாக’ எனும் இடத்திலும் அங்கதச்சுவை மூலம் சமூக அவலங்களை வெளிப்படுத்துகிறார். -புவலர் சு. மதியழகன். நன்றி: தினமலர், 3/1/2016.

Leave a Reply

Your email address will not be published.