யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார்

யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார், கி.வீரமணி, திராவிட கழக வெளியீடு, சென்னை, விலை 180ரூ.

தந்தை பெரியாருக்கு ஐ.நா.வின் கிளை அமைப்பான யுனெஸ்கோ உலகில் எந்தத் தலைவருக்கும் அளிக்காத பெரியார் புது உலகின் தொல்லை நோக்காளர். தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ். சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்கவழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி என்ற ஒப்பற்ற வாசகங்களை பாராட்டுரையாகக் கொண்ட ஒரு விருதினை வழங்கி சிறப்பித்தது. இந்த விருது பற்றி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ஒரு நாளைக்கு ஒரு வரியை எடுத்துக்கொண்டு நான்கு நாட்கள் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு ஓர் அரிய ஆய்வுக் களஞ்சியமாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. இது தந்தை பெரியாரின் தொலைநோக்குச் சிந்தனை வெளிச்சத்தையும், அவரது சமூகப் புரட்சிக் கோட்பாடுகளையும் படம் பிடித்துக் காட்டுவதுடன், மூடநம்பிக்கைகளை ஒழிப்பதிலும் அறிவார்ந்த பகுத்தறிவுச் சமுதாயத்தைப் படைப்பதிலும் தந்தை பெரியாரின் பங்களிப்பை விளக்குகிறது. மனித நேயம் காத்து சமத்துவம் தழைக்க விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 9/12/2015.

Leave a Reply

Your email address will not be published.