ருத்ராட்சி

ருத்ராட்சி, கீர்த்தி, சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 90ரூ.

சிவபெருமானின் திருச்சின்னங்களில் ஒன்றான ருத்ராட்சத்துக்கு பல மகிமைகள் உள்ளன. அதை அணிவதால் அற்புதமான பலன்களை அடையலாம் என்கிறார். நூலாசிரியர் கீர்த்தி. நன்றி: தினத்தந்தி 10/4/13.  

—-

 

திருக்குறள் சிறப்புரை, க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை 29, விலை 100ரூ.

திருக்குறளுக்கு சிறப்புரை, விளக்கம், கருத்து அடைவு ஆகியவற்றை அனைவரும் சுலபமாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் அழகிய தமிழில் கொடுத்துள்ளார் க.ப. அறவாணன், நவீன கட்டமைப்புடன் வந்துள்ள புதிய பதிப்பு. நன்றி: தினத்தந்தி 10/4/13.  

—-

 

போர்த்தொழில் பழகு, வெ. இறையன்பு, புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி.இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 32, விலை 250ரூ.

போர்த்தொழில் பழகு என்றார் மகாகவி பாரதியார். மனித இனம் போரின் தீமைகளை உணர்ந்திருந்தாலும் சிலநேரங்களில் அடுத்தவர்கள் நம் எல்லைகளை ஆக்கிரமிக்கும் போதும், பண்பாட்டை அழிக்கிற போதும் தடுத்து நிறுத்துவதற்காகப் போர் புரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. போரின் நெறிமுறைகளை உணர்பவனே தன்மையும், நாட்டையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். நூலாசிரியர் வெ. இறையன்பு நாற்பது அத்தியாயங்களில் போரின் பல்வேறு உத்திகளையும் விளக்குகிறார். இந்நூலில் இருக்கின்ற விவரிப்புகள் போர்க்களக்காட்சியையே கண்ணெதிரில் பார்ப்பதைப்போன்ற உணர்வை உண்டாக்குகின்றன, புத்தகத்தை எடுத்தால் படிக்கும் வரை கீழே வைக்க முடியாத அளவிற்கு சரித்திரமும், குட்டிக்கதைகளும் கார்ப்பரேட் நிறுவன எடுத்துக்காட்டுகளும் உருவகக்கதைகளும் நம்மை புத்தகப் பக்கங்களோடு அடித்துச் செல்கின்றன. சுவையும் சுவாரஸ்யமும் இணைந்திருக்கும் இந்நூல் தமிழில் ஓர் அரிய மூயற்சி அனைவரும் அடிக்கடி வாசிக்க வேண்டிய பெட்டகம். நன்றி: தினத்தந்தி 10/4/13.

Leave a Reply

Your email address will not be published.