வள்ளியூர் வரலாறு

வள்ளியூர் வரலாறு, முனைவர் சு. சண்முக சுந்தரம், காவ்யா பதிப்பகம், சென்னை, பக். 503, விலை 400ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-311-3.html

அள்ளியூர் என்பது பள்ளியூராகி, இன்று வள்ளியூர் என்று வழங்கப்படும் ஊரை, தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் காணலாம். முருகனை மணந்த வள்ளியின் விரிவான வரலாற்றை, இந்நூல் வாசிக்கிறது. இது குலசேகர பாண்டியனின் இறுதிக் கோட்டை நகரம். இங்கு நடந்த கன்னடப் போர் மிக முக்கியமானது. அகத்தியர், அருணகிரிநாதர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் தமிழால் போற்றப்பட்ட ஊர். புராணம், வரலாறு, கல்வெட்டு, இலக்கியம், வாய்மொழி, வழக்காறுகளை வைத்து வள்ளியூர் கிம விரிவாக இந்நூலில் வரலாறாக வரையப்பட்டு உள்ளது. கல்வெட்டுச் செய்திகளில் உலகமுழுதுடையார் என்ற சாந்திக்கூத்தி, வள்ளியூரில் அம்மன் கோவிலைக் கட்டியது படிப்போரை வியக்க வைக்கிறது. சமணம் மற்றும் அறுசமய ஆலயங்கள் பற்றி விளக்கமும், நாட்டுப்புற கதைப் பாடல்கள் தெரிவிக்கும் செய்திகளும் விரிவாகத் தரப்பட்டுள்ளன. வள்ளியூர் மண்ணின் மணம் வீசும் கதைகளும், பாடல்களும் வரலாறு மறுஆவணம் செய்யப்பட்டு உள்ள நூலிது. -முனைவர் மா.கி. ரமணன், நன்றி: தினமலர், 18/8/2013    

—-

 

உயர்கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி, டி. வெங்கட்ராவ் பானு, வசந்தா பிரசுரம், 6.ஜெய் சங்கர் தெரு, சென்னை 33, விலை 88ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-657-9.html

உயர்கல்வி பயில இருக்கும் மாணவர்கள் எந்தமாதிரியான படிப்பு படிக்கலாம்? அந்த படிப்புகளுக்கு ஏற்ற வேலைகள் என்ன? படிக்கும்போது கிடைக்கக்கூடிய சலுகைகள், உதவித்தொகை, அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள், அனைத்தும் தரப்பட்டுள்ளன. வேலை வாய்ப்பு கிட்டாவிடில் சுயமாக செய்யக்கூடிய வேலை விவரங்களும் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/7/2013

Leave a Reply

Your email address will not be published.