விடுதலைப் போரில் தமிழகம் (முதல் பாகம்)

விடுதலைப் போரில் தமிழகம் (முதல் பாகம்), ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், சென்னை, பக். 688, விலை 600ரூ.

1930 வரையிலான சுதந்திரப் போரின் வரலாற்றையும் அதில் தமிழகத்தின் பங்களிப்பையும் முன்வைக்கிறது முதல் பாகம். கிபி 1790 களில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்த பாளையங்கோட்டை கட்டபொம்மன் ஏன் வரலாற்றாசிரியர்களால் விடுதலைப் போர் வீரனாக ஏற்கப்படவில்லை என்ற கவலையுடன் தமிழகத்தின் பங்களிப்பைத் தொடங்குகிறார் ம.பொ.சி. அது மட்டுமல்ல 1857 சிப்பாய் புரட்சியை முன்னிலைப்படுத்துவோர், ஏன் 1806 வேலூர் சிப்பாய்க் கலகத்தை ஒரு சுதந்திரப் போராட்ட கிளர்ச்சியின் முன்னோடியாகக் கொள்ளவில்லை என்றும் வருந்துகிறார். இருப்பினும் தொடர்ந்து நடைபெற்ற விடுதலைப் போரில் தமிழகத் தலைவர்கள் அனைவருடைய பங்களிப்பும், அந்த பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பங்களிப்பை மட்டுமே சொல்லிச் செல்லாமல், இந்தியா முழுவதிலும் நடந்த விடுதலைப்போரின் கூறகளையும் இணைத்தே சொல்கிறார். ஆகவே, இந்திய விடுதலைப் போரையும் படித்த திருப்தி ஏற்படுகிறது. 1857 சிப்பாய் புரட்சியை ஒடுக்கிய கர்னல் ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல் சிலையை சென்னையில் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழர் போராட்டமும், நீல் சிலை அகற்றப்பட்டதும்இந்த விவகாரத்தில் அச்சிலையை சேதப்படுத்தியவர்கள் நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்ததை மகாத்மா காந்தி பாராட்டியதும் சுவையாக விவரிக்கப்பட்டுள்ளன. கோட்சே சிலை தொடர்பான பிரச்னை எழுந்துள்ள இந்த வேளையில், நீல் சிலை குறித்த விவாதம் மறுவாசிப்புக்கு உரியது. நன்றி: தினமணி, 14/2/2015.

Leave a Reply

Your email address will not be published.