ஸ்ரீ அரவிந்தர்

ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னையின் பொன்மொழிகள், தொகுப்பு காந்திமதி கிருஷ்ணன், நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 100ரூ.

நம்பிக்கைதான் மனிதனுக்கு இருக்கும் மிகப் பெரிய பலம். அது மட்டும் இருக்குமானால் அவனால் எல்லாக் கஷ்டங்களையும், எல்லாச் சூழ்நிலைகளையும் மிக மோசமானவற்றையும் ஊக்கத்தை இழந்துவிடாமல், மனமுடைந்து போகமல் எதிர்த்து நிற்க முடியும். அப்படிப்பட்டவன் கடைசிவரை ஆண்மையுடன் போரிடுவான். அமைதியான அசையாத மனமும் பிராணனும் உள்ள தன்மைக்கு சமதை என்று பொருள். பிராண இயக்கங்களான கோபம், அதீத உணர்ச்சி, செருக்கு, ஆசை முதலியவை மீது சுயாட்சி கொள்ளுதல், அவை உனது மனவெழுச்சிகளைப் பற்றிக்கொண்டு உனது உள் அமைதியைக் கெடுக்க அனுமதியாமை, அவற்றின் தூண்டுதலால் பேசவோ, செயலில் இறங்கவோ செய்யாதிருத்தல், ஆன்மாவின் உள் அமைதியினின்றே எதையும் பேசுதல், செய்தல் இதுவே சமதை என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். மனம் செய்யும் தவறு. முன்னேற்றத்திற்குத் தடையாய் இருப்பவை, தனிமை உணர்ச்சி, அமைதியான மரணம், நமக்கு அடிகள் விழுவதற்குக் காரணம், மந்திரத்தின் சக்தி, பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு, கல்வியின் நோக்கம், பணத்தின் மதிப்பு முதலிய தலைப்புகளில் உள்ள பொன்மொழிகள் ஒவ்வொன்றுமே ஞானமொழிகள். ஸ்ரீ அரவிந்த யோகத்தின் தத்துவங்களைத் தாங்கி வெளிவந்துள்ள இந்நூல், ஞானயோகம் பற்றி அறிய விரும்பவோர்களுக்கு ஏற்படும் பல சந்தேகங்களுக்கு விடை தருகிறது. நன்றி: தினமணி, 4/8/2014.

Leave a Reply

Your email address will not be published.