ஹெர்மான் ஹெஸ்ஸின் சித்தார்த்தா ஓர் ஆய்வு

ஹெர்மான் ஹெஸ்ஸின் சித்தார்த்தா ஓர் ஆய்வு, சுரானந்தா, சுரா பதிப்பகம், பக். 176, விலை 80ரூ.

128 பக்கங்கள் மட்டுமே கொண்ட சித்தார்த்தா என்ற ஜெர்மானிய நாவல், 1946ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றது. இந்நூலின் ஆசிரியர் ஹெர்மான் ஹெஸ், இந்தியாவில் கேரள மாநில சர்ச் ஒன்றில் பணியாற்றிய பாதிரியாரின் பேரன். இது புத்தரின் போதனைகளையும், இந்திய கலாசாரத்தையும் மையமாக வைத்து புனையப்பட்ட நாவல். இதில் வரும் முக்கிய கதாபாத்திரமான சித்தார்த்தன் பிராமண குடும்பத்தில் பிறந்து, பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட்டாலும், அவன் மனம் அதில் லயிக்கவில்லை. முக்தி பெறும் வழியை அறிய வேண்டும் என்ற வேட்கைக்கு ஆளாகிறான். உற்ற தோழனாக வரும் கோவிந்தனும் அதற்கு துணை நிற்கிறான். ஒரு கட்டத்தில் இருவரும் புத்தரைத் தேடிச் சந்தித்து, அவரால் ஈர்க்கப்பட்டாலும், கோவிந்தன் மட்டுமே அவரது சீடனாகிறான். சித்தார்த்தனோ, புத்தரைப்போல் குருவின்றி தன் முயற்சியினாலே முக்தி பெற விரும்பி மடத்திலிருந்து வெளியேறுகிறான். அதற்குப் பின் அவன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அவன் முக்திபெற உதவியதா, இல்லையா என்பதை உயர்வான சிந்தனைகளுடன் சித்தார்த்தா விவரிக்கிறது. இதை தமிழாக்கம் செய்த சுரானந்தா, சித்தார்த்தாவை அப்படியே மொழிபெயர்க்காமல், ஆய்வு நூலாக உருவாக்கியுள்ளார். அதே சமயம் மூலக்கதை சிதைந்துவிடாமலும், சுவைகுன்றாமலும் எளிய தமிழ்நடையில் இந்நூலை உருவாக்கியுள்ளது சிறப்பானது. -பரக்கத். நன்றி: துக்ளக், 21/10/2015.

Leave a Reply

Your email address will not be published.