நோய்மனம்

நோய்மனம், கோவி. பால. முருகு, தமிழ்வேந்தன் பதிப்பகம், வடலூர் 607303, பக். 112, விலை 70ரூ. கண்ணில் பட்டு கருத்தில் பதிந்து மனதைவிட்டு அகலாத கருத்தை ஏற்படுத்துபவையே சிறந்த சிறுகதைகள் என்பர் இலக்கிய ஆர்வலர். நூலாசிரியர் நல்ல சிறுகதைகளைப் படைக்க முயற்சித்திருப்பது தெரிகிறது. ஆனால், அதே சமயம், கருத்துத் திணிப்பின் களமாக சிறுகதையை அவர் பயன்படுத்துகிறாரோ என்ற எண்ணத்தை படிப்போர் மனதில் ஏற்படுத்துவதையும் தவிர்க்க முடியவில்லை. திருப்பம் என்ற முதல் சிறுகதையில் தொடங்கி வேட்கை வரையில் கதையை அவசர அவசரமாகக் கூறுவதுபோல இருக்கிறது. கதையைப் […]

Read more

கடவுளின் நிறம் வெண்மை

கடவுளின் நிறம் வெண்மை, 52 புனிதர்களின் சரிதம், எஸ்.கே.முருகன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 336, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-391-3.html நமது இதிகாசங்கள், புராணங்கள், உபநிடதங்களில் எண்ணற்ற புனிதர்கள் உலவுகின்றனர். அவர்களில் துருவன்,பிரகலாதன், நாரதர் போன்ற பக்த மகாரத்தினங்களை அனைவரும் அறிவர். அதே சமயம் புராணங்களில் எதிர்மறை நாயகர்களாக இருந்த பலரும்கூட, இறை பக்தியில் சளைத்தவர்களல்ல. அவர்களில் சிலரை அறிமுகப்படுத்தும் முயற்சியே இந்நூல் எனலாம். மது கைடபர், சூரபதுமன், மாருசன், சகுனி, கஜமுகன் […]

Read more

திருச்சி வே. ஆனைமுத்து கருத்துக் கருவூலம் (15 தொகுதிகள்)

திருச்சி வே. ஆனைமுத்து கருத்துக் கருவூலம் (15 தொகுதிகள்), வெளியீட்டகம், 8/2, இராசரத்தினம் தெரு, இரண்டாம் மாடி, மேற்குத் தாம்பரம், சென்னை 45, 15 தொகுதிகளும் சேர்த்து விலை 4500ரூ. 90 வயதைத் தொட்டு, பெரியாரின் பெருந்தொண்டராக இன்றும் உற்சாகமாக வலம் வருகிறார் திருச்சி வே. ஆனைமுத்து. அரசுப் பணியைத் துறந்து அரசியல் பணியை ஏற்றவர். பகுத்தறிவு, நாத்திகம், ஆகிய தத்துவத்துக்காக எழுதியும் பேசியும் போராடியும் வருகிறார். இளமையில் முடுக்குடன் இருப்பவர்கள் முதுமையை அடையும்போது மெள்ள தவங்கி, கொள்கையில் சாயம் வெளுத்து முடங்கிவிடக்கூடும். ஆனால் […]

Read more

உயிர்ப்பு மிக்க காவியம்

உயிர்ப்பு மிக்க காவியம், சீறா வசனகாவியம், கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர், கல்தச்சன் பதிப்பகம், 21, மேயர் சிட்டி பாபு தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5. சீறாப்புராணத்தின் உரைநடை வடிவம்தான் இந்தச் சீறா வசன காவியம். இதை எழுதியிருப்பவர் காயல்பட்டணத்தைச் சேர்ந்த கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர். இது 125 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. என்றாலும் அதில் கையாளப்பட்டுள்ள மொழியால் இந்நூல் இன்று உயிர்ப்புடன் இருக்கிறது. இந்தப் புத்தகம் சீறாப்புராணத்தின் பொழிப்புரையோ தெளிவுரையோ அல்ல. கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர் இதை ஒரு பருந்துப் பார்வையுடன் எழுதியிருக்கிறார். சீறாப்புராணத்தின் […]

Read more

சுரதா

சுரதா, ஆர். குமாரவேலன், சாகித்ய அகடமி, பக். 128, விலை 50ரூ. உவமைக் கவிஞர் என்று பலராலும் புகழப் பெற்றவர். 85 ஆண்டு காலம் (1921-2006) உடையில் தூய்மை, நட்பில் தூய்மை என்று எங்கும் எப்போதும் தூய்மையாகவே வாழ்ந்து காட்டியவர். அவரது வாழ்க்கை வரலாற்றை மிக அருமையாக, எளிமையாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். -சிவா.   —-   நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சரிதை, பிரபோதரன் சுகுமார், ஹயக்ரீவா பப்ளிகேஷன்ஸ். பதினெட்டா நூற்றாண்டில் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்த ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சமாதி […]

Read more

ஆன்மிக, சமய இலக்கியக் கட்டுரைகள்

ஆன்மிக, சமய இலக்கியக் கட்டுரைகள், எஸ். சாய்ராமன், பூங்கொடி பதிப்பகம், சென்னை 4, பக். 200, விலை 100ரூ. இந்நூலில் உள்ள அருணகிரிப் புராணமும் அருணாசலப் புராணமும் என்ற கட்டுரை, அருணாசல தல வரலாறு குறித்து சிறப்பாக விவரிக்கிறது. வானவரும் வாசகரும் என்ற கட்டுரையில் மாணிக்கவாசகருக்கும் சிவபெருமானுக்கும் இடையிலான உரையாடல் ரசிக்கும்படி உள்ளது. அந்தந்தக் கால மக்களின் நாட்டின் நாகரிகம், பண்பாடு, மரபு இவற்றையெல்லாம் இணைத்துக்கொண்டு வற்றாத நீரோட்டமாகப் பாய்ந்து இக்கால மக்களையும் வளப்படுத்துவதுதான் இலக்கியம். ஆதலின் இலக்கியம் காலத்தால் அழியாமல் என்றும் நிலைபெற்றிருக்கும் […]

Read more

பள்ளி உளவியல்

பள்ளி உளவியல், பாஞ். இராமலிங்கம், தமிழ்ப் புதுவை வெளியீடு, 22, தேர் வீதி, பிள்ளைசாவடி, புதுவை 14, பக். 240, விலை 300ரூ. மாணவர்களின் உளவியல் குறித்த அடிப்படை அம்சங்களை ஆசிரியர்கள் மட்டுமின்றி, பெற்றோர்களும் அறிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள அவசியமான நூல். எதைக் கற்பது? எப்படிக் கற்பது? கற்றதை வாழ்வில் எப்படிப் பயன்படுத்துவது? என்பனவற்றை இந்நூல் விளக்குகிறது. குழந்தைகளை அடக்கி வளர்த்தலே அவர்களுக்கு திக்குவாய் பிரச்னை ஏற்பட முதல் காரணம். திக்குவாய் உள்ள குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதே அப்பிரச்னைக்குத் தீர்வு காண உதவும் […]

Read more

தனிநாயக அடிகளாரின் படைப்புகள்

தனிநாயக அடிகளாரின் படைப்புகள், பூம்புகார் பதிப்பகம், பக். 397, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-6.html இலங்கை யாழ்ப்பாணத்தில் கரம்பொன் என்ற ஊரில் பிறந்த சேவியர் தனிநாயகம் அடிகளார் எழுதிய புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு இந்நூல். தனிநாயகம் அடிகளாரின் தமிழ்ப்பணியை மீண்டும் ஒரு முறை நினைவு கூரும் வகையில் உள்ளது. இந்த நூலின் முதல் பிரிவான ஒன்றே உலகம் பகுதியில், தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, […]

Read more

தோட்டக்காட்டீ

தோட்டக்காட்டீ, (இலங்கையின் இன்னொரு முகம்), இரா. வினோத், அறம் பதிப்பகம், ஹென்னூர் மெயின்ரோடு, பெங்களூரு 560077, கர்நாடகா, பக். 120, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-3.html இலங்கைவாழ் மலையகத் தமிழர் குறித்து கவிதை வடிவில் வெளிவந்திருக்கும் வரலாற்ற ஆவணம் இது. மலையக மக்களின் அவலங்களையும் தடங்களையும் கவிதைகள் வழி காட்சிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். இலங்கைவாழ் மலையகத் தமிழர் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டுள்ளனர், யாரால் வஞ்சிக்கப்பட்டனர் என்பதை பதிவு செய்வதுடன், இன்றைய யதார்த்தத்தையும் எளிதாகப் புரியும்படி வடித்திருக்கிறார். மலையக மக்கள் […]

Read more

நீங்களும் ஜெயிக்கலாம்

நீங்களும் ஜெயிக்கலாம், ரமணன், புதிய தலைமுறை பதிப்பகம், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 32, பக். 120, விலை 120ரூ. நீங்கள் ஒரு தொழிலைத் தொடங்க நினைக்கிறீர்கள். அதுதான் உங்கள் கனவு. லட்சியம். வாழ்க்கை. ஆனால் அதை எப்படித் தொடங்குவது? எங்கிருந்து தொடங்குவது? என்ற கேள்வி எழுகிறது. அந்த கேள்விக்கு விடைதான் இந்த நூல். ஒரு தொழிலைத் தொடங்க என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும். தொடங்கிய தொழிலை எப்படி வளர்த்தெடுப்பது என்பது போன்ற வெற்றியின் ரகசியங்களை உங்களுக்கு சொல்லி ஜெயிக்க வைக்கும் முயற்சியே இந்நூல்.   —- […]

Read more
1 2 3 4 5 10