நாட்டு வைத்திய களஞ்சியம்

நாட்டு வைத்திய களஞ்சியம், கொ.மா. கோதண்டம், நிவேதிதா பதிப்பகம்,சென்னை 94, பக். 304, விலை 175ரூ. எடுத்தற்கெல்லாம் ஊசி மாத்திரை என்று ஓடாமல், ஒரு தலைவலிக்குக்கூட ஐம்பது, நூறு என்று செலவு செய்யாமல் வீட்டு அருகில் முளைத்திருக்கும் துளசி போன்ற செடிகளின் இலைகளாலும், வீட்டில் இருக்கின்ற மிளகு, சுக்கு போன்றவற்றினாலும் நமக்கு நாமே எளிய முறையில் செய்து கொள்ள உதவும் இனிய மருத்துவமே, மூலிகை மருத்துவம் என்று சொல்கிற நூலாசிரியர், இந்நூலில் சித்த மருத்துவ அடிப்படையில் பல்வேறு நோய்களுக்கு எளிமையான மருத்துவத்தைச் சொல்லியிருக்கிறார். தலைவலி, […]

Read more

செவ்வியல் இலக்கிய மணி மாலை

செவ்வியல் இலக்கிய மணி மாலை, ம.சா. அறிவுடை நம்பி, கருமணி பதிப்பகம், புதுச்சேரி 8, பக். 320, விலை 160ரூ. தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நடைபெற்ற கருத்தரங்கம், பயிலரங்கம் ஆகியவற்றில் படிக்கப்பட்ட கட்டுரைகள். தினமணி, தமிழ் ஓசை ஆகிய நாளிதழ்களில் வெளியான கட்டுரைகள், அகில இந்திய வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான சொற்பொழிவு என மொத்தம் 15 கட்டுரைகளால் கோக்கப்பட்ட இலக்கிய மணிமாலை. இலக்கணம், இலக்கியம், அறநெறி, அரசியல், அறிவியல், மதுவிலக்கு, பழந்தமிழர் வாழ்வு, விருந்தோம்பல், கனவுகள், சிந்தனைகள், இசைக்குறிப்புகள் என்ற இவை அனைத்தையும் உள்ளடக்கிய […]

Read more

சார்லி சாப்ளின் ஒரு தரிசனம்

சார்லி சாப்ளின் ஒரு தரிசனம், தி. குலசேகர், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600083, விலை ரூ. 150 ஹாலிவுட் திரைப்பட வரலாற்றில் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்த மாபெரும் கலைஞன் சார்லி சாப்ளின். சினிமாவில், தான் பேசாமலேயே தன்னை எல்லோரும் வியந்து பேசும்படி மௌன மொழியில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திக்காட்டியர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்த இவரது ஆரம்பகால வாழ்க்கை, வேதனைகளும், சோதனைகளும் நிரம்பியவை. வறுமைக்கும், மாற்றந்தாயின் […]

Read more

சங்க இலக்கியம் சில பார்வைகள்

சங்க இலக்கியம் சில பார்வைகள், டாக்டர் சி. பாலசுப்பிரமணியம், பாரி புத்தகப் பண்ணை, 90, பிராட்வே, சென்னை 600108, பக். 248, விலை 90ரூ. பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியன் தமிழின் ஆழத்தையும், அகலத்தையும் ஆய்ந்து, அளந்து எழுதியுள்ள ஆராய்ச்சி நூலிது. தமிழகத்தின் தொன்மையும், சங்க காலச் சிறப்பும், பதிற்றுப்பத்தின் இலக்கிய வளமும், ஆற்றுப்படை இலக்கியத்திறனும், பாடாண் திணை, கதிரவன் ஒளி, அணி நயங்கள், வணிகத் தொன்மை, இசை மேன்மை, இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் ஆகிய பன்முகச் சிந்தனைகளில், ஆய்வுக் களம் அமைத்து நூலை எழுதியுள்ளார். […]

Read more

நுனிப்புல் மேய்தல்

நுனிப்புல் மேய்தல், சுவிஸ் மர்த்தி மாஸ்ரர், காந்தளகம், பக்.176, விலை 100ரூ. பிறந்த நாட்டை விட்டுப் புலம் பெயர்ந்து, அயல் நாடுகளில் அடைக்கலம் புகுந்தவர்கள், அங்கே படும் அவலங்களையும், வேதனைகளையும் அனுபவித்து, அவற்றை எழுத்தில் வடித்துள்ளார் ஆசிரியர். படித்தால், இதயத்தைக் கனக்கச் செய்யும் புத்தகம். -சிவா.   —-   ஜோதி நுணுக்கங்கள், டி.கே. சந்திரசேகரஐயர், மேகதூதன் பதிப்பகம், பக். 200, விலை 100ரூ. ஒருவரது ஜாதகத்தின் மூலம் ஜனன காலத்திலிருந்து, பலன்களை அறிவதற்கான மிக முக்கியமான மற்றும் அடிப்படையான அம்சங்களை (ராசி, திதி, […]

Read more

சிலம்பில் ஈடுபட்டது எப்படி

சிலம்பில் ஈடுபட்டது எப்படி, ம.பொ. சிவஞானம், ம.பொ.சி. பதிப்பகம், பக். 96, விலை 50ரூ. சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுவதற்கு காரணமாக அமைந்த உணர்வுகளை, மனம் திறந்து ம.பொ.சிவஞானம் பேசும் நூல். மனைவி ராஜேஸ்வரி, நான் கண்ணகியாய், ஆங்கிலேய ஆட்சியை எதிர்ப்பேன் என்று கூறிய வீரவுரையைக் கேட்ட பிறகு ம.பொ.சி இந்த தலைப்பில் நீண்ட ஆய்வு செய்து இந்த நூலை அவருக்கே அஞ்சலி ஆக்கியுள்ளார். 1934ல் வெளியான நவீன கோவலன், 1946ல் கண்ணகி, 1966ல் பூம்புகார் ஆகிய திரைப்படங்களால் சிலப்பதிகாரம் தமிழர்களிடையே செல்வாக்கு பெற்றதை […]

Read more

நிழல் இளவரசி

நிழல் இளவரசி, இந்து சுந்தரேசன், தமிழில்-மதுரம் சுந்தரேசன், வானதி பதிப்பகம், பக். 512, விலை 250ரூ. பரந்து விரிந்திருந்த முகலாய சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தை, கைப்பற்ற ஷாஜஹான் மிகக் கடுமையாகப் போரிட்டு ஈவிரக்கமில்லாமல், தன் சொந்த சகோதரர்கள், உடன் பிறவா சகோதரர்கள் மற்றும் மருமகன்கள் என்று எல்லாரையும் வெட்டிக் கொலை செய்துவிட்டு, முடி சூட்டிக் கொள்கிறார். காதல் மனைவி மும்தாஜ் உடன்கூடிக் களித்து, பதினான்கு குழந்தைகளைப் பெறுகிறான். நாவல் ஆரம்பத்திலேயே மும்தாஜ், தன் 38 வயதில் பதினாலாவது குழந்தையை பெற்று விட்டு இறந்துபோகிறாள். தந்தையை கவனித்துக் […]

Read more

திலக பாமா கவிதைகள்

திலக பாமா கவிதைகள், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 600024, பக். 732, விலை 650ரூ. இந்நாளின் புதுக்கவிதை வாணர்களுள், குறிப்பாக பெண் கவிஞர்களுள் குறிக்கத்தக்க, ஒருவர் திலக பாமா, மரபின் தாக்கம் கொண்டவை, இவரது படைப்புகள். ஆனால் சிந்தனைகள் புதுமை வேகம் கொண்டவை. மொழியைப் பயன்படுத்தும் வல்லமை வாய்ந்துள்ள, இவரின் சொல்லாட்சிகள் சுவைக்கத் தக்கன. கவிதைகளைக் கதைகளாகவும், கதைகளைக் கவிதைகளாகவும் எழுதக்கூடிய சதுரம்பாடு பாராட்டத்தக்கது. வழிவழியாகப் பெண்ணைப் படைத்த பாதையினின்றி விலகி, ஒரு புதுப் பாதையை இவர் […]

Read more

ஓவியமாய் ஒரு பெண்

ஓவியமாய் ஒரு பெண், யோகா, யோக சாவித் பப்ளிகேஷன்ஸ், 15/90, பாண்டி பஜார், தி.நகர், சென்னை 17, விலை 75ரூ. பிரபல புகைப்படக் கலைஞர் கலைமாமணி யோகா எழுதிய 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே ஓவியமாய் ஒரு பெண். 11 கதைகளில் முதல் கதையாக அமைந்து நூலின் தலைப்புக்கு பெருமை சேர்த்திருக்கிறது ஓவியமாய் ஒரு பெண் சிறுகதை. அவரவர் துறையில் பிரபலமாயிருக்கிற தம்பதிகளின் அன்பின் நேசத்தை ஆழமாகவே பதிவு செய்திருக்கிறது. கணவர் குடும்பத்தில் அவரது சகோதர வட்டம் எல்லாரும், 58 வயதுக்குள் இறைவனடி சேர்ந்துவிட, […]

Read more

தமிழ்ச்சுடர் மணிகள்

தமிழ்ச்சுடர் மணிகள், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108, விலை 230ரூ. மறைந்த தமிழறிஞர் எஸ். வையாபுரிப்பிள்ளை எழுதிய இந்நூல் மிகப் புகழ் பெற்றது. தொல்காப்பியர், திருவள்ளுவர், கபிலர், கம்பர், சடையப்ப வள்ளல், பரிமேலழகர் உள்பட 24 தமிழ்ச்சான்றோர்களின் வரலாறுகளை விரிவாகவும், சுவைபடவும் எழுதியுள்ளார் வையாபுரிப்பிள்ளை. நீண்ட இடைவெளிக்குப் பின் சிறந்த கட்டமைப்புடன் இந்நூல் வெளிவந்துள்ளது. திருவள்ளுவர் பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து இவர் எழுதிய வாழ்க்கைக்குறிப்பு குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு பகுதி வருமாறு, இவர் வள்ளுவர் குடியிற் பிறந்தவர். […]

Read more
1 2 3 4 5 8