தமிழ் குழந்தை இலக்கியம் விவாதங்களும் விமர்சனங்களும்

தமிழ் குழந்தை இலக்கியம் விவாதங்களும் விமர்சனங்களும், சுகுமாரன், தாமரை பப்ளிகேஷன்ஸ், பக். 134, விலை 115ரூ. சிறுவர் இதழ்கள் எங்கே போயின? மகாகவி பாரதியாருக்கு, ஒருநாள் அசா தாரணமான சூழ்நிலை ஏற்பட்டது. மனைவி செல்லம்மா வெளியில் போய்விட்டார். குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு பாரதியாருக்கு. குழந்தையிடம், பாட்டுப் பாடட்டுமா என்று கேட்கிறார். இப்போது பாடக் கூடாது. தூங்கும்போதுதான் பாட வேண்டும் என்று குழந்தை அவருக்குச் சொல்கிறது. குழந்தையின் உலகத்தை விளக்கும் பதிவு இது. குழந்தைக்fகுப் பாட்டு எழுதும்போது, குழந்தையின் நிலையில் இருந்து துவங்கவேண்டும். […]

Read more

விவேக சூடாமணி திருக்கு திருசிய விவேகம்

விவேக சூடாமணி திருக்கு திருசிய விவேகம், தமிழில் ரமண மகரிஷி, விளக்கவுரை ப. வைத்தியநாதன், ஸ்ரீரமண பக்த சமாஜம், சென்னை, பக். 300, விலை 200ரூ. விவேக சூடாமணி என்ற சொல் விவேகத்தைத்தந்து உயிர்களை உய்விக்கும் நூல்களுள் மணிமுடியான நூல் என பொருள்படும். 582 சுலோகங்களால், ஆதிசங்கரர் இயற்றிய இந்த நூலை, ரமண மகரிஷி தமிழில் மொழிபெயர்த்தார். அவரது மொழிபெயர்ப்புக்கு, விளக்க உரைதான் இந்த நூல். பிரம்ம ஞானம் சிந்திக்க தேவையான நான்கு சாதனங்கள், அண்டத்திலும் பிண்டத்திலும் உள்ள பஞ்சபூத அமைப்பு, பத்துவகை வாயுக்கள், […]

Read more

ஆசிரியர்களே அச்சாணிகள்

ஆசிரியர்களே அச்சாணிகள், சுவாமி விமூர்த்தானந்தா, ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியீடு, பக். 205, விலை 75ரூ. பள்ளிகளில்தான், நாட்டின் எதிர்காலம் உள்ளது. ஆசிரியர்களின் தோள்களின்மீது, சிறந்த இளைஞர்களை உருவாக்கும் பொறுப்பு உள்ளது. தேவையான உதாரண புருஷர்களை உருவாக்குவரா அல்லது எப்போதும் தேர்விற்கான தயாரிப்பிலேயே மூழ்கி விடுவரா? மதிப்பெண் வாங்கி தருவதிலேயே அவர்களுக்கு முழு மகிழ்ச்சி கிட்டுகிறதா? இக்கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில், சிறந்த ஆசிரியர்கள் பலரின் அனுபவங்கள், கட்டுரைகளாக இந்த நூலுள் மலர்ந்துள்ளன. சிறந்த ஆசிரியராக முன்னேற, நான்கு முக்கிய அம்சங்களைப் பின்பற்ற வேண்டும். கற்பித்தலை […]

Read more

தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன்

தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன், வெ. நீலகண்டன், சூரியன் பதிப்பகம், பக். 208, விலை 150ரூ. ராஜராஜ சோழனை விட, அதிக வெற்றிகளை குவித்தவன், அவன் மகன் ராஜேந்திர சோழன். கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என, பெருமையோடு அழைக்கப்பட்டவனின் வரலாற்றை தெளிவுபட விவரிக்கிறது இந்த நூல். ராஜேந்திர நோழன் கட்டிய கங்கை கொண்ட சோழீஸ்வரம் கோவிலை கட்டிய சிற்பி, குணவன். ஆட்சி நிர்வாகத்திற்காக, தன் நாட்டை, ஒன்பது மண்டலங்களாக பிரித்தார். இலங்கை, மும்முடி சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது உள்ளிட்ட, ஏராளமான வரலாற்று தகவல்கள், […]

Read more

சினிமாவுக்கு வந்த சின்ன வாத்தியார்

சினிமாவுக்கு வந்த சின்ன வாத்தியார், வெ. மு.ஷா. நவ்ஷாத், ஓவியம் பதிப்பகம், மதுரை, பக். 160, விலை 110ரூ. தமிழ்த் திரை உலகில், பெரிய வாத்தியார் எம்.ஜி.ஆர்., சின்ன வாத்தியார் கே. பாக்யராஜ். இந்தியாவின் மிகச் சிறந்த திரைக் கதையாசிரியர்களில் ஒருவரான பாக்யராஜ், கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளாங்கோவில் என்ற கிராமத்தில், 1953ல் பிறந்தார். சென்னைக்கு வந்த அவர், பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்து, சிறு சிறு பாத்திரங்களில் நடித்து, கதாநாயகன் பாத்திரம் ஏற்றும், பிறகு சொந்தமாகக் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்ற […]

Read more

சாவித்திரி வாழ்க்கை வரலாறு

சாவித்திரி வாழ்க்கை வரலாறு, நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா, தோழமை வெளியீடு, விலை 250ரூ. நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று சாவித்திரி – கலைகளில் ஓவியம் என்ற தலைப்பில் நெஞ்சைத் தொடும் விதத்தில் எழுதியுள்ளார் நாஞ்சில் மு.ஞா. செ. இன்பா. 1955ல் வெளிவந்த மிஸ்ஸியம்மா படத்தில், ஜெமினிகணேசனும், சாவித்திரியும் இணைந்து நடித்தனர். அப்போது அரும்பிய காதல், பிறகு திருமணத்தில் முடிந்தது. இரு குழந்தைகள் பிறந்தன. 1968ம் ஆண்டில் சாவித்திரி டைரக்டர் ஆனார். அதனால் பல பிரச்சினைகளை சந்தித்தார். சொத்துக்களை இழந்தார். ஈருல் ஓருயிர் என்பதுபோல் வாழ்ந்த […]

Read more

திசை கடக்கும் சிறகுகள்

திசை கடக்கும் சிறகுகள், ஈரோடு தமிழன்பன், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 275ரூ. கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. மானுட விடுதலையைப் பிரதானமாகக் கொண்டு கவிதைகளை இயற்றும் கவிஞர், ‘தமிழ்த் தாயே, இப்போது உனக்கென ஒரு நாடு இல்லை, உனக்குத் தெரியுமா?’ என்ற கேள்விகளால் நெஞ்சில் வேள்வி வளர்க்கிறார். சிலர் இறுக்கப் பிடித்து கை குலுக்கினால் அச்சமாக இருக்கிறது. மோதிரங்கள் களவு போகின்றன. போகட்டும், ஆனால் சில நேரங்களில், விரல் ரேகைகளே காணாமற் போய்விடுகின்றன. மூன்றாம் உலக நாடுகளில் மரணங்கள் நேரடிப் […]

Read more

நம் நாயகம்

நம் நாயகம், ஜெஸிலா பானு, அல்லாப் பிச்சை ராவுத்தர் அறக்கட்டளை, திருவாரூர் மாவட்டம், விலை 300ரூ. இறுதி இறைத் தூதராய் இந்த அவனியில் அவதரித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அகில உலகத்திற்கே ஓர் அழகிய முன் மாதிரி. அவர்கள் வாழ்வில் நடந்த அற்புதமான சம்பவங்களை 63 தலைப்புகளில் எழுத்தாளர் ஜெஸிலா பானு இந்த நூலில் தொகுத்து வழங்கியுள்ளார். நபிகளாரின் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் மனித சமுதாயம் பின்பற்றி நடக்க வேண்டிய போதனைகளாகும். அதே குழந்தைகளுக்காக அவர்கள் மொழியிலேயே சின்ன சின்ன கதைகளாக […]

Read more

மகாகவி பாரதியாரின் பகவத் கீதை

மகாகவி பாரதியாரின் பகவத் கீதை, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. எல்லோரும் படித்து பயன்பெற வேண்டிய நூல் பகவத் கீதை. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட கீதையை, மகாகவி பாரதியார் அழகிய தமிழில் மொழிபெயர்த்து முன்னுரையும் எழுதியுள்ள இந்நூல் தனிச்சிறப்பு வாய்ந்தது. நன்றி: தினத்தந்தி.   —- மாண்புமிகு மாணவராகலாம், சிவபாரதி, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 40ரூ. மதிப்புமிக்க மாணவ சமுதாயம் மலரவும், நாளைய உலகை ஆளநல்ல தலைவர்கள் உருவாவதற்கான 10 தலைப்புகளில் நல்கருத்துகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி.

Read more

சுந்தர வால்மீகி ராமாயணம்

சுந்தர வால்மீகி ராமாயணம், அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலை 450ரூ. ராமாயணம், பாரத தேசத்தின் தலைசிறந்த இதிகாசங்களில் ஒன்று. ராமாயணம்தானே, எல்லாருக்கும் தெரிந்ததுதானே எனலாம். ஆனால் இந்நூல் முழுமையையும் படித்து முடித்தால், ராமாயண நிகழ்வுகளுக்கு இத்தனை அர்த்தங்கள் உள்ளனவா, நிகழ்வுகளுக்குள் இத்துணை சூட்சுமங்களும், ரகசியங்களும் உள்ளனவா என்று அதிசயிக்கத் தோன்றும். ராமஜென்ப பூமியான அயோத்தியில் துவங்கி, சீதாதேவி சிறை வைக்கப்பட்டிருந்த அசோக வனம் வரையில் உள்ள பெரும்பாலான ராமாயண நிகழ்விடங்களுக்குச் சென்று அந்தந்த சேத்ரங்களில் அந்தந்த தலங்களில், அந்தந்த தீர்த்தங்களில், அந்தந்த […]

Read more
1 2 3 4 8