இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி

இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி, முனைவர் எஸ்.எம்.உமர், அல்லயன்ஸ் கம்பெனி, பக். 288, விலை 275ரூ. உயர்ந்த மனநிலையில் எம்.எஸ்., இசை கேட்டு மகிழ்வர் பலர்; இசையாகவே வாழ்ந்தவர் சிலரே. அச்சிலரில், இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி குறிப்பிடத்தக்கவர். இந்த நூல் அவர் வாழ்க்கை வரலாற்றை விவரிப்பதுடன், அவர் பண்பு நலன்களையும் மிக நேர்த்தியாக விவரிக்கிறது. எட்டு வயதில் முன்னறிவிப்பின்றி அரங்கேற்றமான எம்.எஸ்.,சின் மேடைக்கச்சேரி (பக்.35), எம்.எஸ்.,சின் முதல் இசைத்தட்டுகளை எச்.எம்.வி., நிறுவனம் வெளியிட்டது (பக். 41), சென்னை மியூசிக் அகாடமியில் 1932ம் ஆண்டு, அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் […]

Read more

நந்தனின் பிள்ளைகள் பறையர் வரலாறு 1850-1950,

நந்தனின் பிள்ளைகள் பறையர் வரலாறு 1850-1950, ராஜ்சேகர் பாசு, தமிழில் அ. குமரசேன், கிழக்கு பதிப்பகம், பக். 560, விலை 500ரூ. அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்த பறையர்கள் வசதியற்றவர்களாக, நிலமற்றவர்களாக இருந்த தமிழக பறையர்கள் விவசாயிகளாக உயர்ந்து, பக்கத்து நாடுகளுக்குக் கூலித் தொழிலாளர்களாகக் குடிபெயர்ந்து, பிறகு படிப்படியாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய வரலாற்றை நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார் கொல்கத்தா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராஜ்சேகர் பாசு. ஆய்வுக்காக அவர் எடுத்துக்கொண்ட காலகட்டம் 1850 முதல் 1956 வரை. ‘சேஜ் இந்தியா’ வெளியிட்டு வரும் நவீன […]

Read more

கரப்பான் பூச்சி நகைக்குமோ?

கரப்பான் பூச்சி நகைக்குமோ?, நீதியரசர் பிரபா ஸ்ரீ தேவன், கவிதா பதிப்பகம், பக். 280, விலை 225ரூ. அனுபவ அறிவும் அக்கறையும் ‘எனக்கு ஏதாவது பெருமை இருக்குமானால், எனது எண்ணத்தில் தெளிவும், செயல்பாடுகளில் நேர்மையும், தீர்ப்புகளில் நியாயமும் இருக்குமானால், அதற்குக் காரணம் நான் வி.கிருஷ்ணஸ்வாமி அய்யரின் கொள்ளுப் பேத்தி என்பது தான்’ (பக்.80) என்று பெருமையுடன் கூறும் நூலாசிரியர், தினமணி நாளிதழில் எழுதிய 45 கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ‘அவர்கள் குரல்களைக் கேளுங்கள். அவை நம்பிக்கையின் சவங்களுக்கு ஊதும் சங்கா இல்லை சமூகத்தை […]

Read more

சிதைந்த கூடு முதலிய கதைகள்

சிதைந்த கூடு முதலிய கதைகள், ரவிந்தீரநாத் தாகூர், தமிழில் சு. கிருஷ்ணமூர்த்தி, சாகித்ய அகாடமி வெளியீடு, பக். 288, விலை 175ரூ. தாகூர் நல்ல படைப்பாளி. கவிதை, கதை, நாடகம் போன்றவற்றில் முத்திரை பதித்தவர். அவர், இந்த சிறுகதைத் தொகுதியில், பெண்கள் தம் வாழ்க்கைப் போக்குகளில் எதிர்கொள்ளும் கொடுமைகள், துயரங்கள், தன்னிச்சையான மனநிலை, இவற்றோடு லட்சியத்தாகம் முதலானவற்றை வெளிப்படுத்தியுள்ளார். பெண்களை மையப்படுத்திய இச்சிறுகதைகள் யதார்த்தமான தளத்தில் நகர்கின்றன. தாகூரின் கதைகளில் பெண்களுக்கான பரிவும், பாசமும் பல கதைகளில் தென்படும். இந்நூலில் அமைந்துள்ள பத்துக் கதைகளும் […]

Read more

காலம் தோறும் நரசிங்கம்(பண்பாட்டுக் கட்டுரைகள்)

காலம் தோறும் நரசிங்கம்(பண்பாட்டுக் கட்டுரைகள்), ஜடாயு, தடம் பதிப்பகம், பக். 203, விலை 130ரூ. ஒவ்வொரு சிந்தனையுடன், வரலாறு, பண்பாடு, கலாசாரம், மதம், வழிபாடு உள்ளிட்டவற்றை பார்க்கும் போது, அதன் வடிவம் வேறுபடும். அவ்வாறு, ஆசிரியர் ஜடாயு தனது பார்வையில் பண்பாடு சார்ந்த சிந்தனைகளை கட்டுரைகளாக வடித்துள்ளார். பல்வேறு காலங்களில் அவர் எழுதி வெளிவந்த பண்பாட்டுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, நூல் வடிவில் வெளியாகி இருக்கின்றன. காந்தியின் கிராம ராஜ்ய கனவு முதல், வேதநெறி, அப்துல் கலாம், ஹிந்துத்துவம் என, பலதரப்பட்ட விஷயங்களை எடுத்துரைக்கிறார். ராமன், […]

Read more
1 5 6 7