இடக்கை

இடக்கை, எஸ். ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம், பக். 358, விலை 375ரூ. பேரரசர் அவுரங்கசீப் மரணம் அடைவதை சொல்லி, இந்த நாவல் துவங்குகிறது. டில்லி அரியணை ரத்தக்கறை படிந்தது. எளிய மனிதன் ஒருவனும் அதில் அமர்ந்ததேயில்லை. இந்த நாவல் வரலாற்றில் வாழ்ந்த சாமான்ய மனிதர்களின் கதையை சொல்ல முயல்கிறது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் அத்தனை பேரையும் சிறையில் அடைக்க இடம் இல்லாமல் போய் விட்டதால், அவர்களுக்கென ஒரு சிறு நகரை உருவாக்கி இருந்தனர். அந்த நகரை காலா என அழைத்தனர். சில குற்றவாளிகள் […]

Read more

காமராஜர் எனும் கலங்கரை விளக்கம்

காமராஜர் எனும் கலங்கரை விளக்கம், அரங்க பரமேஸ்வரி, வையவி பதிப்பகம், பக். 192, விலை 120ரூ. அரசியலிலும் நேர்மையை நிலைநாட்ட முடியும் என்று வாழ்ந்து காட்டிய பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கையை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வதோடு, தாமும் அம்மாமனிதர்போல் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற தூண்டுதல் உணர்வை ஏற்படுத்தும் நூல். நன்றி: குமுதம், 10/8/2016.

Read more

பாரதியின் பாஞ்சாலி சபதம்

பாரதியின் பாஞ்சாலி சபதம், பதிப்பாசிரியர் பழ. அதியமான், காலச்சுவடு பதிப்பகம், பக். 200, விலை 180ரூ. பதிப்புலகின் புதுமை: 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெளியான நூல் ஒன்றின், 21ம் நூற்றாண்டு பதிப்பு இந்நூல். ஆம்! பாரதியின் பாஞ்சாலி சபதத்தின் மறு பதிப்பு. பதிப்புரை எழுதும் கலையில் ஒரு புதுமையை இந்தப் பதிப்பின் முன்னுரை தெளிவுப்படுத்துகிறது. பாரதியின் பாஞ்சாலி சபதத்தை வியாசரின் பாஞ்சாலி சபதத்துடன் ஒப்பிட்டு மாறுபடும் இடங்களையும், பாரதியின் கவிதை வீரியத்தையும் இப்பதிப்பு வெளிப்படுத்துகிறது. வியாச பாரதத்தில் பாஞ்சாலி சபதம் பகுதி இடம் பெறும் […]

Read more

தொன்மைச் செம்மொழி

தொன்மைச் செம்மொழி, பேராசிரியர் க. முத்துசாமி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 256, விலை 190ரூ. பண்டைத் தமிழின் பெருமை. குமரிக் கண்டம் இருந்தது என்பதைக் கிரந்த ஆகமம் தெரிவிக்கிறது என்றும், அந்தக் கண்டம் மூன்று பிரிவுகளாக இருந்தது என்றும் இந்த நூலின் முதல் கட்டுரை தெரிவிக்கிறது. குமரி, ஆறு, குமரி மலை, பறுளி ஆறு பற்றியும், சிவன், திருமால், காளி முதலான வழிபாடு பற்றியும் தெரிவிக்கும் செய்திகள் நம் காதில் தேனாகப் பாய்கின்றன. தொல் தமிழ் எழுத்து தான் பிராமி எழுத்து என்றும் […]

Read more

சிவகுமார் எனும் மானுடன்

சிவகுமார் எனும் மானுடன், தொகுப்பு அமுதவன், அல்லயன்ஸ் கம்பெனி, பக். 432, விலை 400ரூ. நல்லொழுக்கம், நற்பண்புகளுக்கு சினிமாத்துறையில் எடுத்துக்காட்டாக விளங்குபவர் நடிகர் சிவகுமார். கோவை மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த இவர், பிழைப்பு தேடி 1950 – களில் சென்னை வந்து, சுமார் 7 ஆண்டுகள் ஓவியம் பயின்று, 40 ஆண்டுகள் திரைப்படங்களிலும், நாடகங்களிலும், சின்னத்திரையிலும் பல வகையான பாத்திரங்களில் பரிணமித்து, கலையுலக மார்க்கண்டேயனாகப் பாராட்டப்படுபவர். அது மட்டுமின்றி புராண, இதிகாசங்களில் தேர்ச்சி பெற்ற பேச்சாளராக, எழுத்தாளராக, தமிழறிஞராக, தன்னை உயர்த்திக் கொண்டு, […]

Read more

தமிழ்ச் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு

தமிழ்ச் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு, ரவி வைத்தீஸ்வரன், ரா. ஸ்தனிஸ்லாஸ், மேன்மை வெளியீடு, பக். 336, விலை 250ரூ, தற்கால சமய, பண்பாட்டு, அரசியலை விளங்கிக் கொள்ளும் நோக்குடன், அண்மைக் காலத்தில் கோட்பாடு ரீதியாக எழுச்சி பெற்ற பின் அமைப்பியல், பின் காலனித்துவம், விளிம்பு நிலை மக்கள் ஆய்வு முறை, பின் காலனிய மதச் சார்பின்மை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. இந்தியா, இலங்கை, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிவு ஜீவிகளின் விவாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. நன்றி: குமுதம், 10/8/2016.

Read more

சூல்

சூல், சோ. தர்மன், அடையாளம், பக். 500, விலை 380ரூ. விடுதலையடைந்து, 70 ஆண்டு காலத்தில் இன்றைய நீர்நிலைகள், குடிமராமத்து ஒழிந்து, பொதுப்பணி துறை, வனத் துறை, கனிம வளத் துறை, வருவாய்த் துறை போன்ற அரசின் பல துறைகளின் கண்காணிப்பில் அமைந்த மாற்றங்களையும், பசுமைப் புரட்சி தந்த நவீன வேளாண்மையும், பகுத்தறிவுப் புரட்சி தந்த சித்தாந்த அறிவும் சம்சாரிகளை முன்னேற்றிஉள்ளதா என்பதை கேள்வி கேட்க முனைகிறது இந்நாவல். ஆன்மிகத்தின் ஆணி வேராகவும், நம்பிக்கைகளின் நாற்றங்காலாகவும் விளங்கும் கிராமங்களில் நிகழ்வுறும் நிகழ்வுகளை, வட்டார வழக்கில் […]

Read more

எண்ணுவது உயர்வு

எண்ணுவது உயர்வு (பாரதியின் புதிய ஆத்திசூடி விளக்கவுரை), முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. அச்சம் தவிர் துவங்கி’, ‘வவ்வுதல் நீக்கு’ வரை உள்ள, பாரதியின், 110 புதிய ஆத்திசூடி வரிகளுக்கு, 240 பக்கங்களில், நா.சங்கரராமன் விளக்கவுரை எழுதி உள்ளார். பலர், செய்யுளுக்கான விளக்கவுரையில், தாம் படித்த இலக்கியங்கள், தமது கருத்துக்களை எடுத்துக்காட்டி விளக்குவர். ஆனால், இந்த நூலில், முழுக்க முழுக்க, பாரதியின் மற்ற கவிதைகள், அவை இயற்றப்பட்ட சூழல், அவர் வாழ்வில் கடைபிடித்த நெறிகளை கூறி விளக்கி […]

Read more
1 6 7 8