வீரம் விளைந்தது

வீரம் விளைந்தது, தமிழில் எஸ். ராமகிருஷ்ணன், கார்முகில், விலை 250ரூ. ஒரே நாவல் மூலம் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் பலர் உண்டு. அப்படிப்பட்ட நாவல் ‘வீரம் விளைந்தது’. உலகெங்கும் உள்ள போராளிக் குழுக்களுக்குக் காலம்காலமாக உத்வேகம் அளித்துவரும் நாவல்களில் இதுவும் ஒன்று. ‘How the steel was Tempered’ என்று ஆங்கிலத்தில் வெளியான இந்த நாவல், ஒரு சுயசரிதை நாவல். இதை எழுதியவர் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்படை வீரர்களில் ஒருவராக ரஷ்ணப் புரட்சியில் பங்கேற்றுப் போரிட்ட நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி. இந்த நாவலில் வரும் பாவெல் […]

Read more

பேரரசன் அசோகன்

பேரரசன் அசோகன், சார்லஸ் ஆலன், தமிழில் தருமி, எதிர் வெளியீடு, விலை 400ரூ. ‘சாலையெங்கும் மரங்களை நட்டார் அசோகர்’ என படித்தறியாத சிறுவர்கள் இங்கே எவரும் இருக்க முடியாது. அத்தகைய பேரரசன் அசோகனின் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட வரலாற்றை விவரிக்கிறது இந்நூல். அசோகன் வெறும் மன்னர் மட்டுமில்லை, அவரது மனச் சித்திரங்களாக காணக்கிடைப்பது ஆச்சர்யமூட்டுகிறது. அவர் ஒரு தேசாந்திரியாக இருந்திருக்கிறார். அவரது பயணங்கள் விசாலமானவை. வாழ்ந்த இடமே மறந்துபோகிற அளவுக்குப் பயணப்பட்டிருக்கிறார். அனைத்து மதங்களுமே மரியாதைக்குரியவை என நினைத்து வந்திருக்கிற அசோகனின் பெருந்தன்மை நினைவுகூரத்தக்கது. […]

Read more

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள், ஜான் ரீடு, மலையாளம் யூமா. வாசுகி, தமிழில் ரா. கிருஷ்ணையா, புக்ஸ் ஃபார் சில்ரன், விலை 250ரூ. நவம்பர் புரட்சியின் சாட்சியங்கள் ரஷ்யப் புரட்சி பற்றி மிக விரிவாகவும், அதைப் பற்றி முழுமையானதொரு சித்திரத்தையும் தருகிறது ஜான் ரீடு எழுதிப் புகழ்பெற்ற இந்த நூல். இந்த நூலும் நூலின் தலைப்பும் காலம்காலமாக உச்சரிக்கப்படுவதாகவும் உத்வேகம் ஊட்டக் கூடியதாகவும் இருந்துவருகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் – சோஷலிசவாதி ஜான் ரீடு, ரஷ்யாவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை முன்கூட்டியே உணர்ந்து அந்நாட்டுக்குச் சென்று […]

Read more
1 2 3