அகநாழிகை

அகநாழிகை,(கலை இலக்கிய இதழ்), பொன்.வாசுதேவன், அகநாழிகை, பக். 128, விலை 120ரூ. கலை இலக்கிய இதழ், பிரபல எழுத்தாளர்களின் நேர்காணல், கட்டுரை, சிறுகதைகள், நூல் அறிமுகம், கவிதைகள் என, முழுமையான இலக்கிய இதழாக வெளிவந்திருக்கிறது அகநாழிகை. இலக்கிய வட்டாரத்தில் இந்நூல் தடம் பதிக்கும். நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

வீரம்

வீரம், குன்றில்குமார், ராஜமாணிக்கம்மாள் வெளியீடு, பக். 160, விலை 100ரூ. இந்திய விடுதலை போரில், ஆண்களுக்கு நிகராக, பெண்களும், தங்கள் பங்கை செலுத்தி இருக்கின்றனர். வேலு நாச்சியார் முதல், ஜல்காரி பாய் வரையிலான, பல பெண் தியாகிகள் பற்றிய சுருக்கமான வரலாற்று நூல். நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

விளம்பர மாயாஜாலம்

விளம்பர மாயாஜாலம், சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், பக். 136, விலை 125ரூ. விளம்பரம் என்பது, கலையும், அறிவியலும் கலந்த ஒரு தொழில் நுட்பம். எத்தனை தரமான பொருளாக இருந்தாலும், அதை அழகான விளம்பரமாக உருவாக்க தெரியாவிட்டால் பிரயோஜனம் இல்லை என்கிறது, இந்நூல். நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

தமிழர் வரலாறு (3 தொகுதிகள்)

தமிழர் வரலாறு (3 தொகுதிகள்), தமிழகப் பெண்கள் செயற்களம், பக். 120, 148, 120, விலை 200ரூ, 200ரூ, 180ரூ. பழைய, புதிய, உலோகக் காலம், பழந்தமிழர் காலம், களப்பிரர் காலம் ஆகியவற்றை ஓவிய காட்சிகளுடன் விளக்கி உள்ளனர். பல்வேறு தகவல்கள் மற்றும் தமிழக அரசு தொல்லியல் துறை வெளியீடுகளில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இந்த நூல்கள் வெளிவந்துள்ளன. நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

திருமணக் கோவில்கள்

திருமணக் கோவில்கள், தாமரை பிரதர்ஸ் மீடியா, பக். 144, விலை 150ரூ. திருமண தடை நீங்க, கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஏராளம். அவர்களுக்காக, திருமணம் தொடர்பான பிரச்னை நீங்க, வழிபட வேண்டிய சுவாமிகள் பற்றிய கட்டுரை தொகுப்பு. ஆன்மிகமும், சுவாரசிய தகவல்களும் நிரம்பிய புத்தகம் இது. நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

பாவேந்தர் பாரதிதாசனின் பாண்டியன் பரிசு

பாவேந்தர் பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, முனைவர் சபா. அருணாசலம், முல்லை பதிப்பகம், விலை 40ரூ. புரட்சிக் கவிஞர் படைத்த வீரம், காதல், நகைச்சுவை என யாவும் நிறைந்த ஒப்பற்ற காவியமான பாண்டியன் பரிசின் சுருக்கம், முழுமையாகப் படித்த உணர்வைத் தரும் வகையில் செதுக்கித் தந்திருப்பது பாராட்டத்தக்கது. நன்றி: குமுதம், 21/3/2018.

Read more

மனைவிக்கு

மனைவிக்கு, பெருங்கவிக்கோ, கவியரசன் பதிப்பகம், விலை 190ரூ. பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், தமது இல்லத்தரசிக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. தனிப்பட்ட இருவருக்குமான தகவல்களாக இல்லாமல், மனம் ஒருமித்த தம்பதியராக இல்லறத்தை நல்லறமாய் நடத்திட விரும்பும் எல்லோருக்குமே வழிகாட்டும் வகையிலான மடல்களாக இருப்பது சிறப்பு!. நன்றி: குமுதம், 21/3/2018.

Read more

சோழர் வரலாறு

சோழர் வரலாறு, சி.கோவிந்தராசனார், சி.கோ.தெய்வநாயகம், அன்னம், பக். 222, விலை 150ரூ. சங்க கால சோழர் முதல், பிற்கால சோழர் வரை இந்நூல், சுருங்க விளக்கியுள்ளது, ஆய்வுக்குரிய அடிப்படை செய்திகளை இதில் காணலாம். நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

நான் அவள் கேபுச்சினோ

நான் அவள் கேபுச்சினோ, ஹரிஷ் குணசேகரன், பாரதி பதிப்பகம், பக். 144, விலை 120ரூ. தகவல் தொழில்நுட்ப அரங்கில் பணிபுரியும், இளைய தலைமுறையினரின் விதிக்கப்பட்ட தினசரி வாழ்க்கை. வயதின், சூழலின் நெருக்கத்தில் வரும் காதல்கள், பிரிவின் துயரங்கள், இந்தக் கதையில் விரவிக்கிடக்கின்றன. நவீன கால வாழ்க்கையைப் பேசும் இலக்கியம், அமுத கண்ணும், சிந்திய மூககுமாய் இருக்க வேண்டும் என்பதை, இந்நாவல் மறுத்து ஒதுக்குகிறது. நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

இலக்கிய அமுதம்

இலக்கிய அமுதம், ச.உமாதேவி, நந்தினி பதிப்பகம், பக்.160, விலை 80ரூ. இலக்கியத்தின் ஆரம்ப கால படைப்புகள் அனைத்தும், கவிதைகளாக, காவியங்களாக வெளிவந்தன. அவை காலமாற்றத்தால், நவீன இலக்யி வெளிப்பாட்டால், கட்டுரைகளாக உருமாற்ற துவங்கின. இந்த ஆய்வு புத்தகத்தில் பெண்யிம், திருக்குறளில் கல்வி, சிலப்பதிகாரம் காட்டும் மானுட விழுமியங்கள் உள்ளிட்ட, பல ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினமலர், 22/1/2018.

Read more
1 2 3 4 10