காட்டுக்குள்ளே கணித மாயாவி

காட்டுக்குள்ளே கணித மாயாவி, இரா.செங்கோதை, மகாயுகம், பக். 72, விலை 60ரூ. கணிதத்தில் தோன்றும் பல்வேறு சிறந்த புதிர்களை மையமாகக் கொண்டு, ஒவ்வொரு அத்தியாயமும் செதுக்கப்பட்டுள்ளது. இந்நுாலை படிக்கும் இளம் மாணவர்களுக்கு, கணிதம் மீதுள்ள அச்சம் நீங்கி மகிழ்வை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அழகிய கதை வடிவில் கணித கோட்பாடுகளை திறமையாக வெளிப்படுத்திய நுாலாசிரியரை நிச்சயம் பாராட்டலாம். நன்றி: தினமலர், 30/9/2018.   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

ஆப்பிளுக்கு முன்

ஆப்பிளுக்கு முன், சி.சரவணகார்த்திகேயன், உயிர்மை பதிப்பகம், பக்.168, விலை ரூ.170, பிரம்மச்சரியம் பற்றிய காந்தியின் சிந்தனைகள் வித்தியாசமானவை. அவர் வாழ்ந்த காலத்திலும், அதற்குப் பிறகும் பலரால் ஏற்றுக் கொள்ளப்படாதவை. காந்தி தனது பிரம்மச்சரியத்தைப் பரிசோதிப்பதற்காக இரவில் தூங்கும்போது பெண்களுடன் நிர்வாணமாகப் படுத்திருந்தார் என்பதன் அடிப்படையில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. காந்தியின் இறுதிக் காலத்தில் அவருக்குத் துணையாக இருந்தவர் பேத்தி முறையுள்ள மநு என்கிற இளம் பெண். காந்தி தனது பிரம்மச்சரியப் பரிசோதனையை அவரை வைத்துத் தொடர்ந்தபோது, காந்தியின் ஆசிரமத்தில் இதனால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. காந்தியின் […]

Read more

தமிழாய்வு: புதிய கோணங்கள்

தமிழாய்வு: புதிய கோணங்கள், அ.பாண்டுரங்கன், யுனிக் மீடியா இன்டகரேட்டர்ஸ், பக்.240, விலை ரூ.200. தமிழாய்வுக்கென்று மரபு வழிப்பட்ட சில நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆனால் இந்நூலிலுள்ள கட்டுரைகள், தமிழாய்வைப் புதிய கோணத்தில் பார்த்திருப்பதுடன், தமிழாய்வு குறித்து, மரபுவழிப் பேராசிரியர்கள் உருவாக்கியுள்ள பிம்பங்களை உடைத்திருக்கிறது. தமிழ் உரைநடை பாடத்திட்டத்தில் நவீனத் தமிழ் இலக்கியம் பற்றிய சிந்தனைக்கு இடமில்லை. அது லிட்ரரி கிரிட்டிசிஸம் என்ற பெயரில் போதிக்கப்படுகிறது. அதைக் கற்பிக்கும் பேராசிரியர்கள் ஆங்கில நூல்களை அடியொற்றியே இலக்கியத் திறன், இலக்கிய மரபு என்னும் அடிப்படையில் கற்பிப்பதால், இலக்கிய விமரிசனம் […]

Read more

பகவான் புத்தர்

பகவான் புத்தர், தர்மானந்த கோஸம்பி, தமிழில்: கா.ஸ்ரீ.ஸ்ரீ, சாகித்திய அகாதெமி, பக்.334, விலை ரூ.270. பகவான் புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். தர்மானந்த கோஸம்பி எனும் பாலி மொழி அறிஞர் மராட்டி மொழியில் எழுதியதன் தமிழாக்கம்.பன்னிரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் அந்தக் காலத்து அரசியல் நிலை, சமயநிலை, ஆன்மவாதம், கர்ம யோகம், சாதிப் பிரிவினை போன்ற தலைப்புகளில் அக்காலத்திய சமூகச் சூழல் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தர் குறித்து இதுவரை கூறப்பட்டு வரும் பல செய்திகள் தவறானவை என்பதை இந்நூலைப் படிக்கும்போது அறிய […]

Read more

இதிகாசம் புராணத்தில் இந்திய சட்டங்கள்

இதிகாசம் புராணத்தில் இந்திய சட்டங்கள், முனைவர் பங்காரு வேணுகோபால், வானதி பதிப்பகம், பக். 80, விலை 50ரூ. நாம் யார்? நம் நாகரிகம் எப்படிப்பட்டது என்பதையும், இன்றைக்கு இருக்கிற சட்டங்களோடு இந்திய கலாசாரப் பண்பாடு எப்படி பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும், நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்ற கதைகளும், வரலாற்று இதிகாச புராணங்களும் எவ்வளவு மேன்மை பொருந்தியவை என்பதையும் கூறும் இந்நுால், இன்றைய இளைய தலைமுறையினருக்கு பாடம் கற்பிப்பதாக அமைந்துள்ளது. நன்றி: தினமலர், 30/9/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026683.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

தலைமைப் பொறுப்பேற்கலாம்

தலைமைப் பொறுப்பேற்கலாம், சந்திரிகா சுப்ரமணியன், சந்திரோதயம் பதிப்பகம், பக். 64. இந்நுாலில், தயங்காது வாருங்கள் தலைமைப் பொறுப்பேற்க… எது தலைமைத்துவம்? அதன் வகைகள், தலைமையேற்க வயது ஒரு தடையல்ல, மேலாண்மையும் தலைமைத்துவமும், நீங்கள் சிறந்த தலைமைத்துவம் உள்ளவரா? தலைமைத்துவமும் உடல் மொழியும், சோம்பேறிகளை நிர்வகித்தல், பத்து விடயங்களை மறுப்பதற்கு தவறவேண்டாம், நெல்சன் மண்டேலா கற்றுத் தந்த தலைமைத்துவம் உள்ளிட்ட கட்டுரைகள், நுாலாசிரியர் தான் கற்ற, பெற்ற அனுபவங்களின் வெளிப்பாடு எனலாம். நன்றி: தினமலர், 30/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

வார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை,  தற்காலக் கன்னடச் சிறுகதைகள்

வார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை,  தற்காலக் கன்னடச் சிறுகதைகள், தொகுப்பும் மொழியாக்கமும்: கே.நல்லதம்பி, எதிர் வெளியீடு, பக்.200, விலை ரூ.200. கன்னடத்தில் வெளிவந்த 12 சமகாலச் சிறுகதைகளின் தொகுப்பு. உலகமயச் சூழலில் வாழ்க்கைமுறையில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவை கலை இலக்கியங்களிலும் பிரதிபலிக்கின்றன. அமெரிக்காவின் நேவடா மாநிலத்தில் பரத்தமைத் தொழில், நவீனத் தொழில்களுக்குரிய நிர்வாக உத்திகளுடன் நடைபெறுவதைச் சொல்கிறது தொழில் சிறுகதை. போனதலைமுறையில் குடும்பத்தில் தந்தை ஆழமாக உள்ளோடும் அன்போடும், இறுகிய வெளித்தோற்ற முகத்துடனும் அதிகாரம் செலுத்தியதைச் சித்திரிக்கிறது சிரத்தை சிறுகதை. அளவுக்கதிகமான காம உணர்வுடைய […]

Read more

தமிழர் மரபும் அறிவியல் பார்வையும்

தமிழர் மரபும் அறிவியல் பார்வையும், ச.இராமமூர்த்தி, லாவண்யா பதிப்பகம், பக்.160, விலை ரூ.150. பதினாறு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தமிழரின் வாழ்க்கை, சிந்தனை, இயற்கைச் சூழல் ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றைப் பற்றிய அரிய விஷயங்களை இந்நூலில் உள்ள கட்டுரைகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. அகநானூறு, நற்றிணை, பொருநராற்றுப்படை உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் யாளி என்று கூறப்படுவது சிங்க முகம் கொண்ட கொடிய விலங்கு; 1800 ஆம் ஆண்டிற்குப் பிறகே அறிவியல் அணு பற்றிக் கூறத்தொடங்கியது. ஆனால் அதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு […]

Read more

கதை திரைக்கதை வசனம் இயக்கம்

கதை திரைக்கதை வசனம் இயக்கம், இரா. பார்த்திபன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 250ரூ. திரைக்கதை திரையான கதை எதையும் வித்தியாசமாகச் செய்யும் முனைப்பே ஒரு படைப்பாளியாக பார்த்திபனின் அடையாளம். அவர் எழுதி இயக்கி வெற்றி பெற்ற ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ சினிமா அப்படியான முயற்சிக்கு ஓர் புத்தகம் இப்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் திரைக்கதை, திரைக்கதை எழுதுபவர்களைப் பெரிதும் ஈர்த்திருந்தது. குறிப்பிட்ட கதாபாத்திரம் எந்த நிலையில் இருக்க வேண்டும், என்ன ஆடையை எப்படி அணிந்திருக்கவேண்டும் என்பது உட்பட அனைத்து விவரங்களும் நூலில் தரப்பட்டிருக்கின்றன. […]

Read more

மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை

மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை, தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம், விலை 40ரூ. கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு. அரசியல் சட்டத்தின் வாயிலான மாநில உரிமைகள், இந்தியக் கல்வி வரலாறு என்று இருவேறு கோணங்களில் கல்வி உரிமையை அணுகும் கட்டுரைகள். நன்றி:தி இந்து, 6/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 2 3 9